Author Topic: ~ முட்டைகோஸ், நூல்கோல், சவ்சவ் - கிரீம் சூப் ~  (Read 817 times)

Offline MysteRy

முட்டைகோஸ், நூல்கோல், சவ்சவ் - கிரீம் சூப்



என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,
நூல்கோல்,
சவ்சவ் எல்லாம் சேர்த்து - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பால் - கால் கப்,
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
காய்கறிகளையும், வெங்காயத்தையும் வெண்ணெயில் நன்கு வதக்கி, மிக்சியில் அரைக்கவும். அந்தக் கலவையில் 2 கப் தண்ணீர் விட்டுக் கலந்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். சூப் எப்போதும் கொதிக்கக் கூடாது. குறைந்த தணலில்தான் இருக்க வேண்டும். சோள மாவை தண்ணீர் அல்லது பாலில் கரைத்து, கலவையில் கொட்டவும். இறக்கியதும் மிளகுத் தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.