பாசி பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பட்டர்நட் ஸ்குவாஷ் - பாதி
பூண்டு - 3 பல்
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
நெய், எண்ணெய்
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். மசூர் பருப்பை 5 மணி நேரம் ஊற விடவும். ஊறிய பருப்புடன் மற்ற பருப்பு வகைகள், பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும்.
நறுக்கிய பட்டர்நட் ஸ்குவாஷ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி சேர்த்து அதிக நீர் விடாமல் பதமாக குழையாமல் வேக வைக்கவும்.
வெந்ததும் உப்பு, வேக வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
நெய்யில் தாளிப்பு சேர்த்து தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்
சாம்பார் பொடி குறிப்பிற்கு இங்கு சொடுக்கவும் : சாம்பார் பொடி
நெய்யுடன் சுடு சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். பட்டர்நட் ஸ்குவாஷ் என்பது பூசணி வகை சார்ந்த காய்.பார்பதற்கு பூசணி போலவே இருக்கும். வாங்கும் போது சற்று காயாக வாங்கினால் அதிக இனிப்பு இருக்காது. பழமாக வாங்கினால் இனிப்பாக இருக்கும். இங்கு பை, சூப், டெசெர்ட் செய்தும், கிரில் செய்தும் சாப்பிடுகிறார்கள். இதனை சில இடங்களில் பட்டர்நட் பம்ப்கின் என்றும் சொல்வதுண்டு.நிறைய வைட்டமின் மற்றும் தாதுக்களை கொண்டது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய காய் இது.