குடைமிளகாய் - ஒன்று
நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - பாதி
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
தயிர் - 2 மேசைக்கரண்டி
மயோனைஸ் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேவையானப் பொருட்களை தயாராக வைக்கவும்.
குடைமிளகாயை கழுவி துடைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து எல்லா புறமும் திருப்பிப் போட்டு வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும் தோலுரித்து பஜ்ஜி மிளகாய், வெங்காயம், மல்லித் தழை, தயிர், மயோனைஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து குடைமிளகாயைப் பொரித்த எண்ணெயையும் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.
விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம். இந்த ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.