Author Topic: வெற்றிலை மிளகு தோசை  (Read 1108 times)

Offline kanmani

வெற்றிலை மிளகு தோசை
« on: December 26, 2012, 10:45:59 PM »
தேவையானவை:

லேசாக புளித்த தோசை மாவு - 4 கப்
பொடித்த மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
கும்பகோணம் வெற்றிலை - 5
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* வெற்றிலை நரம்பு, காம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி உப்பு, பொடித்த மிளகு சேர்த்து கையால் நன்றாகக் கசக்கி மாவுடன் கலக்கவும்.

* தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கனமான தோசைகளாக வார்த்து சூடாகப் பரிமாறவும்.

* ரோஸ்ட்டாக வார்க்கக் கூடாது.

* கபம், சளி, இருமலுக்கு இந்த தோசை சிறந்தது.

* இந்த வெற்றிலை-மிளகு தோசைக்கு எந்த சட்னியும் சூப்பர் ஜோடி.