Author Topic: திருந்தாத ஜென்மம்  (Read 1025 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
திருந்தாத ஜென்மம்
« on: December 26, 2012, 03:33:14 PM »
உடைந்து போதலின்
முன்னனுபவங்கள்
பல இருந்தும்
அது வேறொரு உடைந்து போதலின்
பொழுதின் உதவுவதே இல்லை

எப்படியப்பட்ட‌
வலியோடு
வதையோடு
ரணத்தோடு
அது இருக்குமென்று தெரியும்

எவ்வாறான
ஒரு வீழ்ச்சியையும்
ஒரு விரத்தியையும்
ஒரு நிர்கதியையும்
ஒரு அவநம்பிகையையும்
ஒரு சூன்யத்தையும்
அது தருமென தெரியும்
 
எனினும்
அது குறித்த விழிப்புணர்வு
என்னிடம் திடசித்தமானதாய்
இல்லவே இல்லை

வெவ்வேறு உடைந்து போதலின் சமயங்களிலும்
ஒரே போல் ஒடிந்தாலும்
ஒரே போல் வீழ்ந்தாலும்
ஒரே போல் ரணப்பட்டாலும்
என் புறத்தின் வண்ண ஈர்ப்புக்களால்
அதன் விழிப்பின் தருணங்கள்
மங்கி மறக்கப்படுகின்றன‌

சூளீரென்ற வலியோடு
வரும் ஒரு முறிவின் கணத்தில்
ஊறி பரவும் ஞாபகத்தின் குருதியில்
ஈரம்பாரிக்கின்றன
பழைய ரணங்களின் நிலங்கள்

மீண்டு தழைதோங்கி வளர்ந்து
மீள ஒரு காந்த வெயில்
பழையவைகள் காய்ந்து
ஈர்ப்பில்
நாக்கை தொங்க‌ போட்டு
நாயென‌ வாலிட்டி கொண்டு
அதை நோக்கி ஓட‌
மனதின் எங்கோ ஒரு மூலையில்
கொஞ்சம் ஈரம் மிச்சமிருக்கும் ஒன்று சொல்லும்
திருந்தாத ஜென்மமென‌

எனினும் அதையெல்லாம்
எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை
புத்தி
« Last Edit: December 26, 2012, 04:47:49 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: திருந்தாத ஜென்மம்
« Reply #1 on: January 03, 2013, 06:49:39 PM »
Quote
கொஞ்சம் ஈரம் மிச்சமிருக்கும் ஒன்று சொல்லும்
திருந்தாத ஜென்மமென‌

எனினும் அதையெல்லாம்
எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை
புத்தி

மனித இயல்பு இது .. திருந்திவிட்டால் ... கவிதைக்கு பொருளும் கிடைக்காது .. வாழ்கையில் சுவாரஸ்யமு கிடைக்காது ... மன இயல்பை பற்றிய அருமையான கவிதை ... நான் கூட இப்டிதான் சிலதடவை அல்ல பல தடவைகளில் திருந்தாத ஜென்மம் ..

நல கருத்து பொதிந்த கவிதை ஆதி நன்றி
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: திருந்தாத ஜென்மம்
« Reply #2 on: January 03, 2013, 09:16:16 PM »
nalla kartha solli irrukinga aathi superb ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ! SabriNa !

Re: திருந்தாத ஜென்மம்
« Reply #3 on: January 05, 2013, 12:41:29 PM »
  nice aadhi....!!