Author Topic: பாலக் பக்கோடா  (Read 789 times)

Offline kanmani

பாலக் பக்கோடா
« on: December 21, 2012, 06:18:24 PM »
மாலை வேளையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், நல்ல சுவையோடு இருக்கும் வகையிலும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு பாலக் பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது. இப்போது இந்த பாலக் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 1 கிலோ
கடலை மாவு - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாலக் கீரையை கழுவி, தண்டுகளை நீக்கி, இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பௌலில் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதில் நறுக்கி வைத்துள்ள பாலக் கீரையை போட்டு, போண்டா போடுவதற்கான பதத்தில் தண்ணீர் ஊற்றி, கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை எடுத்து, எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பாலக் பக்கோடா ரெடி!!! இதனை தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.