பாசிபயறு-1கப்
குடமிளகாய்-1
சாம்பார்த்தூள் -1டேபிள்ஸ்பூன்
தக்காளி-2
வெங்காயம்-1
தாளிக்க
கடுகு-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பாசிபயறை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும்.
அதனுடன் தேவைக்கு நீர் சேர்த்து 5 விசில் விடும்வரை/வேகும் வரை வைக்கவும்.
வானலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறீவேப்பிலை தாளித்து
வெங்காயம் தக்காளி வதக்கி குடமிளகாய் துண்டுகள் வதக்கி சாம்பார்த்தூள்,உப்பு சேர்த்து தேவைக்கு நீர் விட்டு வேகவிடவும்.
பிறகு அதனுடன் வேகவைத்த பாசிபயறை நன்றாக கலந்து மேலும் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
Note:
குடமிளகாய்க்கு பதில் உருளைகிழங்கு,சீனிகத்தரிக்காய்,பீர்க்கங்காய்,சுரைக்காய் என பிடித்த காய்கள் தனியாகவோ ,கலந்தோ சேர்க்கலாம்