பழுத்த வாழைப்பழம் - 3
மைதா - 200 கிராம்
சீனி - 150 கிராம்
முட்டை - 2
பால் - ஒரு கப்
வெண்ணெய் - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.
வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
முட்டையுடன் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அதில் பால் சேர்க்கவும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
உருக்கிய வெண்ணெய் கலவையையும், முட்டை, சீனி கலவையையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
கடைசியாக வாழைப்பழக் கலவையை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலந்து, மைதாவையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
நன்றாக குழைத்து கேக் பானில் ஊற்றவும்.
நெய் தடவிய தட்டில் 180 டிகிரி சூட்டில் அவனில் வைத்து சுமார் 25 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.
சுவையான பனானா கேக் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.