உளுந்து - அரை கப்
அரிசி மாவு - 2 கரண்டி
மிளகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - கால் கப்
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க
காய்கறி கலவையை ஆவியில் அரை வேக்காடு வேக வைத்து ஆற விடவும். உளுந்தை ஊற வைத்து அதிக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகு, சீரகம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, அரிசி மாவு மற்றும் ஆற வைத்துள்ள காய்கறி கலவை சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை உருண்டைகளாகப் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க விட்டு போண்டாவை பொரித்தெடுக்கவும்.
சுவையான, மொறு மொறுப்பான காய்கறி போண்டா தயார்.