தேங்காய் துருவல் - ஒரு கப்
இறால் - கால் கப்
முட்டை - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பொட்டுக்கடலை - மூன்று மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் - ஐந்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
அனைத்தையும் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கலியாவை சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். (தட்டும் பொழுது கையில் ஓட்டினால் சிறிது தண்ணீர் தொட்டுக் கொண்டு தட்டவும்).
உருண்டைக்கலியா தயார். இதை பருப்பு குழம்பு, சாம்பார் போன்றவற்றுடன் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கும்.
இதே முறையில் இறாலுக்கு பதிலாக மட்டன் கீமா, கணவாய் வைத்து அரைத்தும் செய்யலாம். மட்டன் கீமா என்றால் முதலில் கீமாவை மிக்சியில் அரைத்து பின்பு மற்றவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். வயதானவர்கள் சாப்பிடுவதற்கு நன்கு மென்மையாக இருக்கும்.