தேவையான பொருட்கள்:
முட்டை - 2 பால் - 1/2 கப் ஆப்பிள் கூழ் - 4 டேபிள் ஸ்பூன் (ஆப்பிள் அரைத்தது) சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன் பிரட் - 6-8 துண்டுகள் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் மற்றும் ஏலக்காய் பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த ஆப்பிள் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், அதில் வெண்ணெயை தடவி, பின் பிரட் துண்டுகளை முட்டைக் கலவையில் நனைத்து, தோசைக் கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட் ரெடி!!! இதன் மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரிப் பழங்களால் அலங்கரித்து, தேனுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.