Author Topic: ~ தொண்டைப் புண்ணை சரிசெய்யும் 9 உணவுகள்!! ~  (Read 1074 times)

Offline MysteRy

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் 9 உணவுகள்!


குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளில் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவையே முதன்மையானவை. ஏனென்றால் அப்போது அதிக குளிர்ச்சி காரணமாக, உடலில் உள்ள வெப்பமானது வெளியேறும். எனவே இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலத்தில் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக குளிர்ச்சியான உணவுகள் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டு, இறுதியில் புண்ணை ஏற்படுத்திவிடும்.

ஆகவே தொண்டையில் கரகரப்பு ஏற்படும் போதே, ஒரு சில உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கரகரப்பு முற்றினால், பின்னர் தொண்டையில் புண் ஏற்பட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிட முடியாத அளவில் செய்துவிடும். சொல்லப்போனால் எச்சிலைக் கூட விழுங்க முடியாது. இந்த நிலையிலும் தொண்டையில் ஏற்படும் புண்ணை தடுக்க உணவுகள் தான் உதவுகின்றன. எனவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தொண்டையில் புண் வராமல் தடுப்பதோடு, வந்த புண்ணையும் சரிசெய்யலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

Offline MysteRy



சிக்கன் சூப்

 இருமல் இருந்தால், மருத்துவர்களின் மருந்து என்னவென்றால், அது சூடான சூப் தான். ஏனெனில் அவை தொண்டையின் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும்.

Offline MysteRy



மசாலா டீ

 டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

Offline MysteRy



இஞ்சி

 தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Offline MysteRy



தயிர்

அனைவரும் தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், தயிரை சாப்பிட்டால், அவை வயிற்றை தான் குளிரச் செய்யும். அதிலும் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

Offline MysteRy



எலுமிச்சை சாறு மற்றும் தேன்

Light on எலுமிச்சை சாறு மற்றும் தேன் சிட்ரஸ் பழங்களில் ஆன்டி-வைரல் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண்ணானது குணமாகிவிடும்.

Offline MysteRy

''

சேஜ் இலை

 மூலிகை செடிகளில் ஒன்றான சேஜ் என்னும் மூலிகை இலையில், உடலில் ஏற்படும் உள்காயம், புண் போன்றவற்றை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய இலைகளை சூப், சாலட் அல்லது ஏதேனும் பானங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளை சரிசெய்யலாம்.

Offline MysteRy



வெதுவெதுப்பான ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்

சளி ஏதேனும் பிடித்தருந்தால் அப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்ற தோன்றினால், வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸை கலந்து, அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஈஸியாக விழுங்க முடியும். அதுமட்டுமின்றி, அவை தொண்டைக்கு ஒரு படலம் போன்றதை ஏற்படுத்தி, புண்ணை எளிதில் குணமாக்கிவிடும்.

Offline MysteRy



மிளகு

 காரப் பொருட்களில் ஒன்றான மிளகை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும் போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

Offline MysteRy



ஆப்பிள் சீடர் வினிகர்

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் பொருட்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை சாலட் சாப்பிடும் போது அதன் மேல் ஊற்றியோ அல்லது அப்படியே ஒரு ஸ்பூனோ சாப்பிடலாம்.