Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
reachftcteam@gmail.com
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
~ வரலாற்றில் முக்கியமான இடத்தில் நீல்சு போர் !!! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வரலாற்றில் முக்கியமான இடத்தில் நீல்சு போர் !!! ~ (Read 1186 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222657
Total likes: 27668
Total likes: 27668
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வரலாற்றில் முக்கியமான இடத்தில் நீல்சு போர் !!! ~
«
on:
December 16, 2012, 09:56:58 PM »
வரலாற்றில் முக்கியமான இடத்தில் நீல்சு போர் !!!
நீல்சு என்றிக் டேவிட் போர் அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்
போர் டென்மார்க்கில் கோப்பனாஃகனில் 1885 இல் பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், கிறித்தவ மதத்தின் உலுத்திரன் பிரிவு மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்னாஃகன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் பேராசிரியராக இருந்தார். தாய் எல்லென் ஆட்லர் போர் செல்வாக்கு மிக்க செல்வந்த யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நீல்சு போரின் தம்பி ஹெரால்டு போர் (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். நீல்சு போர் அவர்களும் கால்பந்தாட்ட விளையாட்டுக்காரரும் ஆர்வலரும் ஆவார்.
நீல்சு போர் முதலில் 1903 இல் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்திருந்தார்.ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவித்து இருந்த தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது பிறகு புகழ்பெற்ற கிறிசிட்டியன் கிறிசிட்டியான்சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற சோ. சா. தாம்சன் (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் செய்தார். பின்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் எர்ணசுட்டு ரதர்போர்டு அவர்களிடம் பயின்றார்.
ரதர்போர்டு அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் போர் ஒப்புரு (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்சு போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலயத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியன் ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.
நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நோர்லுண்டு (Margrethe Nørlund) ஆகிய இணையருக்கு ஆறு குழந்த்தைகள் பிறந்தனர். இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர். மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். அவர்களில் ஆகெ நீல்சு போர் 1975 இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
~ வரலாற்றில் முக்கியமான இடத்தில் நீல்சு போர் !!! ~
Jump to:
=> இங்கு ஒரு தகவல்