Author Topic: ~ இந்தியர்கள் அதிகம் டயட்டில் சேர்க்கும் 8 காய்கறிகள்!!! ~  (Read 1295 times)

Online MysteRy

இந்தியர்கள் அதிகம் டயட்டில் சேர்க்கும் 8 காய்கறிகள்!!!



இந்தியர்களுக்கு அனைத்து உணவுகளையுமே விரும்பி சாப்பிடுவர் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு என்று ஒரு சில காய்கறிகளால் செய்யப்படும் உணவுகள் உள்ளன. இந்த காய்கறிகள் அனைத்தும், இந்தியாவில் மட்டும் விளையக்கூடியவை அல்ல. உலகம் முழுவதும் விளையக்கூடிய காய்கறிகள் தான். ஆனால் அத்தகை காய்கறிகளை உலகத்தின் மற்ற பகுதியில் உள்ள மக்கள் அதிகம் சாப்பிடமாட்டார்கள். மேலும் இந்தியர்கள் தங்களின் டயட்டில் சேர்க்கும் உணவுகளின் பட்டியலைப் பார்த்தால், அதில் பெரும்பாலும் சைவ உணவுகள் தான் இருக்கும்.

சொல்லப்போனால், இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதை விட, சைவ உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். மேலும் உலகில் உள்ள மக்கள் அவர்களது டயட்டில் சேர்க்கும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட, இந்தியர்கள் தங்களது டயட்டில் சேர்க்கும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான் அதிகம் என்று ஆய்வு ஒன்றின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிலும் இந்தியர்கள் தங்களது டயட்டில் சேர்க்கும் காய்கறிகள் சிலவற்றை, மற்ற பகுதியில் உள்ள மக்கள் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இப்போது அத்தகைய காய்கள் என்ன, அதில் அப்படி என்ன சத்துக்கள் உள்ளன என்பதை படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறக்காமல் டயட்டில் சேர்த்து ஆரோக்கியமடையுங்கள்.

Online MysteRy



கோவைக்காய்

இந்த வகையான காய் பூசணி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிற்கு வெளியே சாகுபடி அரிதாக சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு எந்த ஒரு சரியான ஆங்கிலப் பெயரும் இல்லை. இதில் கலோரி குறைவாக உள்ளது. மேலும் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

Online MysteRy



முருங்கைக்காய்

முருங்கைக்காய் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இது எலும்புகளை வலுவாக்கும். அதிலும் இது மார்பகத்தில் ஏற்படும் நெரிசல் மற்றும் சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

Online MysteRy



வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை சாப்பிட்டால், சிறுநீரகங்கள் சுத்தமாகும். அதிலும் இதனை நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட்டால், உடலில் சுரக்கும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும்.

Online MysteRy



பாகற்காய்

இந்திய உணவுகளில் பாகற்காய் பல வகைகளில் சமைக்கப்படுகிறது. பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமான அளவில் உள்ளன. இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் இது கசப்பு சுவையில் இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

Online MysteRy



கடுகு கீரை

 கடுகு கீரையில் வைட்டமின் கே என்னும் சத்து மற்ற கீரைகளை விட அதிக அளவில் உள்ளது.

Online MysteRy



வாழைப்பூ மற்றும் தண்டு

 சிறுநீரகக் கல் இருப்பவர்கள், வாழைப்பூ மற்றும் தண்டை வேக வைத்து சாப்பிட்டால் சரியாகும். அதிலும் இதில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

Online MysteRy



பலாப்பழம்

இந்தியாவில் இருக்கும் பழத்தில் மிகுந்த சுவையுடைய பலாப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். சிலர் இதன் காயை சமைத்து சாப்பிடுவர். பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் இதனை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் கட்டுப்படும்.

Online MysteRy



சுரைக்காய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுரைக்காயை காலையில் எழுந்ததும் ஜூஸ் போட்டு குடித்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.