Author Topic: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்  (Read 29976 times)

Offline Global Angel

Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« on: September 12, 2011, 08:13:51 PM »
TAMIL proverbs are saying told since the evolution of TAMIL CIVILIZATION. It is usually told to express great philosophy, advice and experiences. You can view the TAMIL PROVERBS in this page. Submit all the Proverbs you know in the SUBMIT PAZHAMOZHIGAL PAGE


நம் முன்னோர்கள் நமக்காக தேடி வைத்த அரிய பொக்கிசங்கள்  இவை ....  இவை நம் பண்பாடு தோன்றிய காலத்திலிருந்து சொல்லபட்டு வருகின்றது சுருங்க கூறின் இவை தத்துவங்கள் ...அவைக்கு தெரியாமல் அடுத்தவர்க்கு குறிப்பு கொடுத்தல் ..  கிண்டல் பணுதல் புத்தி சொல்லுதல் இவற்றை எல்லாம் மறை முகமாக  ஆனால்புரிந்துகொள்ள கூடிய எளிய நடையில் கிராமத்து வழக்கில் இவை அமைந்துள்ளது ... வேகமாக செல்லும் இந்த காலத்தில் இவற்றை தினம் பயன்படுத்துவது அரிது என்றாலும் . நாம் இவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்ற காரணத்தால் இந்த பதிவினை மேற்கொண்டுள்ளேன் ... நீங்களும் உங்களுக்கு தெரிந்த பழமொழிகளை அதன் விளக்கங்களுடன்  மேற்க்கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ....
« Last Edit: September 12, 2011, 08:34:50 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #1 on: September 12, 2011, 08:24:24 PM »
ஆத்துல கொட்டினாலும் அளந்து கொட்டனும் .
 
எம்மிடம் அளவுக்கு அதிகமாக இருந்து எஞ்சியவற்றை அகற்ற நினைத்தாலும் எங்கே எப்படி எவளவு அதை அகற்றுகின்ரோம் என தெரிந்து செய்யவேண்டும் .

Aaathula kottunaalum alandhu kottanum

alavukku athikamaka irunthu enchiyavatrai naam akatra ninaithaalum enge eppadi evalavu enbathai arinthu therinthu seiyavendum
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #2 on: September 12, 2011, 08:45:12 PM »
ஆற்றில் தண்ணீர் அலை மோதி சென்றாலும் நாயின் தாகம் நக்கிதான் தீரும் .

எவளவுதான் அளவுக்கு  அதிகமாககிடைத்தாலும் தேவைக்கும் அவனுக்கென்று அளந்த அளவுக்கு மீறி அனுபவிக்க முடியாது


Aaatril thanneer alaimothi sendralum Naayin thaagam nakkithan theerum

evvalavuthan alavukku ahikamaaka kidaithaalum thevaikkum avanukennru alantha alavukku meri anubavika mudiyathu.
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #3 on: September 14, 2011, 07:21:18 PM »
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை

ஒரு இக்கட்டில் நல்ல நண்பர்களை இனம் கண்டு கொள்ளலாம் .
  --
Aabathil Ariyalam Arumai Nanbanai

oru ikkaddil nalla nanbarkalai naam inam kandu kolalaaam
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #4 on: September 14, 2011, 08:06:42 PM »

ஆச்சி பிச்சை எடுக்க தம்பி கும்பகோணம் போனானாம்

கஷ்டத்திலும் ஆடம்பரம் நாடுபவர்கள்

Aachi pichai edukka thambi kumbakonam ponaram

kastaththilum aadamparam naadupavarkal

-------------------------------------------------------------------------------------------------------------

ஆடத்தெரியதவனுக்கு மேடை கோணல்

ஒரு விடயத்தை தெரியாமல் தெரிந்தது போல காட்டிக் கொள்பவன் ..அகப்பட்டது நழுவ பொருத்தமில்லாத சில காரணங்களை கர்ப்பிப்பான்


Aadatheriyaathavanukku medai konal

oru visayaththai patri theriyamal therinthathu pol kaaddi kolbavarkal ...agapadathu naluva poruthamatra kaaranangalai solvaarkal .

------------------------------------------------------------------------------------------------------------

ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்தில இறங்க மாட்டார்

ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் ஈடு படமாட்டாதவர்


Aadhayam illaamal chetti aathula iranga maataar

aathaya illamal entha kaariyathilum eedu pada maadaathavar

                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #5 on: September 16, 2011, 05:47:49 PM »
ஆடி காத்துக்கு அம்மியும் நகரும் .

ஏதும் சக்திக்கு மீறி ஆனா பலம் போருந்தியவர்கலாலேயே ஏதும் பண்ண முடியாது ..

aadi kaaththirkku ammiyum nagarum

ethum sakthikku meeri aanaa palam porunthiyavargalalye ethum panna mudiyaathu
---------------------------------------------------------------------------------------------------------
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதிச்சாம்

நமக்கு துன்பம் வரவேண்டும் என்று செயல்படுபவர்களே நமக்கு ஏதும் துன்பம்ன அயோ பாவம்னு கவலை படுவது போல் பாசாங்கு செய்வார்கள்

Aadu nanaiyuthunu oonai aluthichaam

namakku thunbam varavendum enru seyalppadubavargale namakku thunbam varum neram ayo pavam enru kavalaip paduvathu pol paasangu seivaarkal.
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #6 on: September 18, 2011, 04:04:26 AM »

ஆடுற மாட்ட ஆடிகறகணும் பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்

எத எப்டி செய்யணுமோ அதை அப்டி செய்யணும்


aadura maattai aadik karakka venum paadura maattai paadik karakka venum

etha epdi seiyanumo atha apdi seiyanum

-------------------------------------------------------------------------------------------------

ஆள்    பாதி ஆடை பாதி ஒருவர்

உடுத்தி கொள்ளும் ஆடையில் அவர்களது மதிப்பு வெளிப்படும்

Aal paathi aadai paathi

oruvar uduthikollum aadaiyil avarathu mathipu velipadum...
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #7 on: September 25, 2011, 11:44:01 AM »
அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்

ஒரு மனிதன் தான் செய்யும் செயல்கள் தவறு அல்லது பாவம் என்று தெரிந்தும் அந்த செயலை அவன் செய்வானேயானால் அந்த செயலுக்கு அவன் “அழுது அழுது “என்பதற்கு விளக்கம் என்னவென்றால், கைப்பொருளை இழந்தவன் எந்த அளவிற்கு அழுது மனவருத்தப்பட்டு துடிப்பானோ அது போல் இவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு,அல்லது நிம்மதியைத் தொலைத்துவிட்டு. அவன் வாழ்க்கையில் நரகத்தைவிட கொடுமையான வேதனையை அனுபவிப்பான்

« Last Edit: October 12, 2011, 07:34:16 PM by Global Angel »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #8 on: October 12, 2011, 07:33:51 PM »
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா ?
நன்மை செய்தவர்களுக்கே நாம் தீமை செய்ய என்னலாமா ?

Annam iddavar veddil kannam idalaama?
nanmai seithavarkalukke naam themai seiya ennalaama ?
                    

Offline Global Angel

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #9 on: November 02, 2011, 05:04:42 AM »
ஆள் போனால் ஆள் வரும் தாள் போனால் தாள் வரும்
 
ஓர் நல்லது கெட்டதற்கு நாம் எவ்வாறு மட்ட்ரவரிடம் நடந்து கொள்கிறோமோ அதுவே நமக்கு திரும்பி வரும் ...

aal poonaal aal varum thaal poonaal thaal varum

or nallathu keddathil naam evvaru matravaridam nadanthu kolkiromo athuthaan namaku thirumbi varum ...
                    

Offline MysteRy

பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!



அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
 
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
 
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

வேலிக்கு ஓணான் சாட்சி.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

Offline MysteRy

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #11 on: July 31, 2012, 10:58:38 PM »
மூதுரை (அவ்வையார் நூல்கள்)

கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.


நூல்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று? 28

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

Offline MysteRy

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #12 on: August 07, 2012, 10:14:42 AM »

PAZHA MOZHI
(Collection of 615 Tamil Proverbs)

Offline MysteRy

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #13 on: September 03, 2012, 12:45:03 AM »
பழமொழிகள்...1



சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...




பழமொழிகள்




அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.


அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.


அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.


அசையாத மணி அடிக்காது


அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.


அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.


அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.


அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.


அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.


அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.


அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து
இழுத்து விடுவார்கள்.


அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.


அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.


அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.


அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.


அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.


அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.


அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.


அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.


அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.

Offline MysteRy

Re: Tamil Proverbs - தமிழ் பழமொழிகள்
« Reply #14 on: September 03, 2012, 12:46:49 AM »
பழமொழிகள்..., 2



சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...


பழமொழிகள்...



அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.


அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.


அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.


அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!


அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.


அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.


அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.


அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.


அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.


அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.


அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.


அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.


அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.


அதிக ஓய்வு அதிக வேதனை.


அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?


அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.


அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.


அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.


அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.


அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.


அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.


அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.


அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.


அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


அன்பாக பேசுபவருக்கு அந்நியர் இல்லை.


அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.


அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.


அரசனும் அன்னைக்கு மகனே.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.


அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்..


அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!


அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.


அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.


அவனன்றி ஓர் அணுவும் அசையாது.


அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.