Author Topic: காரமான... காளான் மசாலா  (Read 970 times)

Offline kanmani

காரமான... காளான் மசாலா
« on: December 10, 2012, 11:37:28 AM »
அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு, அவைச உணவின் சுவையை காளான் தரும். அதிலும் எப்படி அசைவ உணவுகளை மசாலா, குருமா என்றெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அதேப்போல் இதனையும் மசாலா, குருமா என்று செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இப்போது அந்த வகையில் காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! spicy mushroom masala தேவையான பொருட்கள்: காளான் - 250 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 5 தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் பூண்டு - 7 பல் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1 டீபிள் ஸ்பூன் (துருவியது) தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் கிராம்பு - 1 பிரியாணி இலை - 1 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை: முதலில் காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் கிராம்பு போன்றைவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ளதை ஒரு பௌலில் போட்டு, பின்னர் தக்காளியை போட்டு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அதோடு துருவிய தேங்காய், தக்காளி கெட்சப் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து, கிளறி நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்க்க வேண்டும். அடுத்து தண்ணீர் சிறிது ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும். இல்லையெனில் கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்கலாம். இதனால் காளானும் நன்கு வெந்துவிடும். இப்போது காரமான காளான மசாலா ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.