Author Topic: முகமூடிகளில் தெரியும் முகங்கள்!!!  (Read 1417 times)

Offline Yousuf

சூழ்ந்திருந்த தனிமையில்
சுகமுணர்ந்த மனநிலையில்
மெல்லக் கழற்றினேன்
முகமூடி தன்னை!

அதன்மேல் தான்
எத்தனையெத்தனை
அபிஷேகங்கள்
போலிப்பெருமையின்
பாலாபிஷேகம்
புகழ்மொழிகளின்
பன்னீராபிஷேகம்
கூடவே
இச்சையின் எச்சிலும்
இயல்பின் மிச்சமும்.

வியந்துபார்த்தன கண்கள்
நாவுக்கோ நாணம்
அதன் நர்த்தனம்
காணக்கிடைக்கலாம்
இன்னொரு முகமூடி மீது!