மிளகாய் பழம் - 50 கிராம்
புளி - தேவைக்கு
வெல்லம் - சிறிது
உப்பு - தேவைக்கு
கடுகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க
மிளகாய் பழத்தை காம்பு நீக்கி கழுவி துடைத்து வைக்கவும். அரை தேக்க்ரண்டி அளவுள்ள கடுகு, வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆறவைத்து பொடிக்கவும்.
புளியை கெட்டியாக உப்பு சேர்த்து துளி நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் பழத்தை நறுக்கி, அரைத்து வைத்துள்ள புளி கலவையுடன் கலந்து மூடி இட்டு இரண்டு நாள் குளிர் சாதன பெட்டியில் வைத்து ஊற விடவும்.
இரு நாட்களுக்கு பிறகு நன்கு கலந்து ஊறி இருக்கும்.
மிளகாய்பழக் கலவையை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, அரைத்த மிளகாய் கலவை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்த பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும்.
ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற வைக்கவும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். சுடு சாதத்தில் கடலை எண்ணெய் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உலக்கை உரல் இருப்பவர்கள் மிளகாய் பழத்தையும், புளி, உப்பு கொண்டு இடித்து ஊறவைத்து செய்யலாம்.