பீட்ரூட் - முக்கால் பாகம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
சோம்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - சிறு துண்டு
மிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - பாதி அளவு
கறிவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
வெங்காயம், தக்காளி, பீட்ரூட் மூன்றையும் பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மிளகாய் வற்றல், சோம்பு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து முக்கால் பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து பீட்ரூட்டை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தீயின் அனலை குறைத்து வைத்து பீட்ரூட்டை ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். பின்னர் அதில் உப்பு, கறிவேப்பிலை போட்டு கிளறிவிடவும்.
மூடி போட்டு பீட்ரூட்டை இரண்டு நிமிடம் வேகவிடவும்.
பீட்ரூட்டில் உள்ள தண்ணீர் வற்றி காய் வெந்ததும் மிளகுத் தூள் போட்டு நன்கு பிரட்டி விடவும்.
மிளகுத் தூள் பீட்ரூட்டில் ஒன்றாக சேர்ந்ததும் இரண்டு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
பீட்ரூட் மசாலா கறி தயார்.