Author Topic: கல்யாண மாங்காய் ஊறுகாய்  (Read 800 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
கிளிமூக்கு மாங்காய் - 2,
மிளகாய் தூள் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
வறுத்துப் பொடித்த வெந்தய,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் -கால் கப்,
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மாங்காயைக் கழுவித் துடைத்துப் பொடியாக நறுக்கவும். அதை ஒரு தாம்பாளத்தில் பரத்தி வைக்கவும். அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும். பிறகு மிளகாய் தூள் தூவவும். அடுத்து வறுத்தரைத்த வெந்தய, பெருங்காயத் தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் ஊற்றி, கலந்து வைக்கவும்.