« on: December 07, 2012, 08:23:24 PM »
ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதால், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகிறேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற்றும் பல செயல்களாலும், ஆண்களின் அழகானது பாதிக்கப்படுகிறது. இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல்லவில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களை தவிர்த்து, அழகுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது. சரி, இப்போது அத்தகைய அழகைக் கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங்கள்.

குப்புற தூங்குவது
தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்.
« Last Edit: December 07, 2012, 08:38:37 PM by MysteRy »

Logged