Author Topic: மட்டன் வறுவல்  (Read 992 times)

Offline kanmani

மட்டன் வறுவல்
« on: December 05, 2012, 01:29:55 PM »
    மட்டன் - 1 கிலோ
    தக்காளி - 3 பெரியது
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
    கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு
    கருவேப்பிலை,கொத்தமல்லி - ஒரு கைபிடி
    பச்சை மிளகாய் - 2 அ 4
    அரைக்க தேவையானவை:
    பட்டை - 4
    லவங்கம் - 6
    சோம்பு - 1 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 1 கப்
    பூண்டு - 15 பல்
    இஞ்சி - ஒரு பெறிய துண்டு
    பொட்டு கடலை - 2 தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 1/2 கப்





    மட்டனை குக்கரில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறி மசாலா தூள்,தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
    பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கிக் கொள்ளவும். பின் ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
    பின் கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும்.
    பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.(தேவையெனில் முழு பூண்டை சேர்க்கலாம்).
    பின் 2 பச்சை மிளகாயை கீரி போடவும்.
    பின் வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
    பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
    பின் கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.