தோல் மற்றும் கொழுப்பு நீக்கி சுத்தம் செய்த கோழி - அரைக் கிலோ
* சின்ன வெங்காயம் - 30
* தக்காளி - ஒன்று
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
* மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
* மல்லித் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
* மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
* பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* பட்டை - ஒரு இன்ச் துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மல்லிக்கீரை - ஒரு கொத்து
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
கோழியை தோல் மற்றும் கொழுப்பு நீக்கி மஞ்சள் தூள் வினிகர் சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி
வைக்கவும்.
step 1
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 20 சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
step 2
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் சோம்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
step 3
தீயைக் குறைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே
பொடிகள் வறுபட்டு விடும்.
step 4
ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
step 5
குக்கரில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். ஏலக்காய் வெடித்ததும்
இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
step 6
அதனுடன் மீதமுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
step 7
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
step 8
தக்காளி குழைந்ததும் கோழித்துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை(5 நிமிடம்) வதக்கவும்.
step 9
அரைத்த மசாலா, மஞ்சள் தூள், அரைக் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி மிதமான
தீயில்(medium flame) 4 முதல் 5 விசில் வரை வேக விடவும்.
step 10
குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து மல்லிக்கீரை தூவி கிளறி விடவும்.
step 11
சுவையான கோழிக் குழம்பு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், பிரியாணி, ப்ரெட் மற்றும் நெய்சோறு என
எல்லாவற்றிற்கும் பொருந்தும். தேங்காய்ப்பால் சேர்க்க விரும்பினால் மல்லிக்கீரை சேர்க்கும் முன் கலந்து ஒரு கொதி வந்ததும்
இறக்கி மல்லிக்கீரை சேர்க்கலாம்.