Author Topic: கேரட் சூப்  (Read 666 times)

Offline kanmani

கேரட் சூப்
« on: December 03, 2012, 03:02:10 PM »
குளிர்காலத்தில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு குளிருக்கு இதமாகவும், ஆரோக்கியத்தை தரும் வகையிலும் ஒரு சூப் செய்து தர வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் கேரட்டை வைத்து ஒரு சூப் செய்து தரலாம். அந்த கேரட் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

healthy carrot soup

தேவையான பொருட்கள்:

கேரட் - 6
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - சிறிது
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.