உள்ளம் என்னும் பூவனத்தில்
மலரும் மலர்கள் எத்தனையோ
ஒவ்வொரு வயது பிறக்கையிலும்
ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறதே
எத்தனை அனுபவம் கிடைத்தாலும்
அதில் நிலைத்து நிற்பது எதுஎதுவோ
நாட்கள் என்னும் நூலினிலே
நட்பு பட்டம் விடுகின்றோம்
வாழ்வினை நாமும் கடக்கையிலே
நட்பு அனுபவம் இனிக்கிறதே
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
நட்பு என்பது சுகந்தானே!
நட்பு என்னும் கடலினிலே
நீந்தா மனிதர் எவருமில்லை
சுமையை நாமும் சுமக்கையிலே
நட்பு ஆறுதல் தந்திடுமே
நட்பு சுமைகள் எந்நாளும்
சுகங்கள் தானே தந்திடுமே