வெண்டக்காய் = கால் கிலோ
உப்பு தேவைக்கு
எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடலை மாவு = கால் கப்
கார்ன்ன் பிளார் மாவு = ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
பொடியக நருக்கிய கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
எண்ணை = பகோடா பொரிக்க தேவையான அளவு
வெண்டக்காயை முதலில் கழுவி கொள்ளனும், அரிந்து விட்டு கழுவினால் கொழ கொழப்பாகிவிடும்.
தலையும்,வாலையும் அரிந்து போட்டு விட்டு பொடியாக ஒரு சென்டி மீட்டர் நீளத்துக்கு கட் பண்ணவும்.
அதில் கடலை மாவு, கார்ன் மாவு, அரிசி மாவு, உப்பு,மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தண்ணீர் விடாமல் பிரட்டி, சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
எண்ணையை காய வைத்து உதிர்த்து விட்டு பகோடக்களாக பொரித்து எடுக்கவும்.சூப்பரான மொரு மொரு வெண்டைகாய் பகோடா ரெடி.