Author Topic: எண்ணெய் வாழைக்காய்  (Read 883 times)

Offline kanmani

எண்ணெய் வாழைக்காய்
« on: November 28, 2012, 12:40:29 PM »
முற்றிய வாழைக்காய்    & 2 தோல் சீவி மெல்லிய தகடுகளாக
தூள் உப்பு        & தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள்        & 3 ஸ்பூன்
எண்ணெய்        & 50 மில்லி
கடுகு            & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு    & ஒரு ஸ்பூன்
சோம்பு            &  ஸ்பூன்
கறிவேப்பிலை        & ஒரு ஆர்க்
நறுக்கிய வாழைக்காயை தண்ணீரில் அலசி எடுத்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிசறி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு போட்டு தாளித்து சிவந்ததும் கறிவேப்பிலை, பிசறிய வாழைக்காய்  சேர்த்து கிளறி வேக வைக்கவும்.

(அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்) வாழைக்காய் நன்றாக மொறுமொறுவென வெந்ததும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

கோசமல்லிக் கத்தரிக்காய் வாங்கும்போது காய் பெரியதாகவும், முற்றியதாகவும், விதையுடையதாகவும் பார்த்து வாங்க வேண்டும். (காயை அமுக்கிப் பார்த்தால் கெட்டியாக இருக்கும்)