பேசில் இலை - ஐந்து
சில்லி கார்லிக் சாஸ் - மூன்று டீஸ்பூன்
பச்சை பட்டாணி - அரை கப்
பச்சை மிளகாய் - மூன்று
கோஸ் ,கேரட் - சிறிதளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
அரிசி - ஒரு கப்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பமிருந்தால்)
கடுகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - மூன்று(தாளிப்பிர்க்கு)
மிளகாய் வற்றல் - ஆறு
சாதத்தை உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.மிளகாய் வற்றலை பொடித்து கொள்ளவும்.(வறுக்க கூடாது)ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
வற்றல் பொரிந்ததும் சில்லி கார்லிக் சாஸ் சேர்த்து அரை நொடி வதக்கி பட்டாணி,மிளகாய், காய் கறிகளை வதக்கவும்.பேசில் இலை சேர்த்து வதக்கவும்.
(கோஸ்சை மெலிதாக நீளமாக நறுக்கவும்.)உப்பு சேர்த்து மிளகு தூள்,அஜினமோட்டோ,தூள் செய்த மிளகாய் வற்றல் சேர்த்து அரை வேக்காடாக வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.
சுவையான பேசில் ப்ரைட் ரைஸ் ரெடி.இந்த முறையில் செய்யும் ப்ரைட் ரைஸ் மலேசியாவில் செய்வார்களாம்..
ஒரு முறை மலேசியன் ரெஸ்டாரெண்ட் டில் சாப்பிட்ட பொழுது ருசி அபாரமாக இருந்தது.அவர்களிடம் கேட்டு வாங்கிய குறிப்பு இது..இதே ப்ரைட் ரைஸ்ஸை இன்னும் நான்கு முறையில் செய்யலாமாம்..