Author Topic: அவல் வடை  (Read 1031 times)

Offline kanmani

அவல் வடை
« on: November 28, 2012, 12:29:24 PM »
அவல் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியதாக ஒன்று
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


அவலை மிக்ஸியில் குருணையாக பொடித்து தண்ணீர் ஊற்றி நன்கு அலம்பி வடித்து விடவும். அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதிலேயே அவல் ஊறிவிடும். உருளைக்கிழங்கை வேக்விட்டு , உதிர்த்து கொள்ளவும்.

ஊறிய அவலுடன் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்,வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு எல்லாம் போட்டு நன்கு கலந்து, பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் காயவிட்டு வடைகளாக தட்டி பொன் கலரில் பொரித்து எடுக்கவும்.