Author Topic: சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்  (Read 761 times)

Offline kanmani

சேலத்து மாம்பழத்தை சிலாகித்துப் பேசும் பலருக்கு தட்டுவடை செட்டு பற்றி தெரியாது. வேறெங்குமே
சுவைக்க கிடைக்காத வித்தியாசமான தட்டுவடை செட்டை இங்கு சாப்பிடுபவர்கள் மந்திரித்து
விட்டது போல தினமும் தள்ளுவண்டிக்காரர்களை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். மசாலா
வாசனைதான் அவைகளின் அடையாளம்.

ஒரு தட்டுவடையை சட்னியில் தோய்த்து, மேலே காய்கறித் துரு
வலை அள்ளிவைத்து, அதன்மேல் சட்னி வைத்து, மேலே ஒரு தட்டுவடையால் மூடி தருகிறார்கள்.
புழுங்கல் அரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து, நிறைய நீரூற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

1 கிலோ அரிசிக்கு 200 கிராம் என்ற கணக்கில் பொட்டுக்கடலையை மிக்சியில் மிகச்சிறிதாகப் பொடித்து, அரிசி
மாவில் கலந்து பிசைய வேண்டும். லேசாக எண்ணெய்விட்டு பிசைந்தால் உருட்ட எளிதாக இருக்கும்.
தேவையான உப்பு சேர்த்து கோலிக்குண்டு அளவுக்கு உருண்டையாக தட்டுவடை செட் உருட்டி, ஒரு
வெள்ளைத்துணியில் வைத்து, லேசாக உருண்டையின் தலையில் தட்டி தட்டையாக்க வேண்டும்.

மாவின் நீர்த்தன்மை போவதற்காக 1 மணி நேரம் அப்படியே உலர்த்த வேண்டும். பிறகு நீர் வடிந்த தட்டையை எண்ணெயில் பொரித்தால் தட்டுவடை ரெடி.