நார் இல்லாத மாம்பழம் 2
எருமைப்பால் 400 கிராம்
சீனி 250 கிராம்
பாதம் பருப்பு 100 கிராம்
நெய் 50 கிராம்
ஏலக்காய் 2
மாம்பழத்தை மேல் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, மேல் தோல் நீக்கி, நெய்யில் வறுத்து நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சீனியைப் போட்டு கலக்கி அடுப்பில் வைக்கவும். சிறு தீயாக எரிய வேண்டும்.
பால் நன்றாகக் கொதித்துக் கொதித்து இறுகி வரும். மிகவும் கெட்டியாக இறுகி வரும்பொழுது பொடியாக அறிந்துள்ள மாம்பழத்
துண்டுகளைப் போட்டு கிளறி விட வேண்டும். ஏலக்காய்ப் பொடியை தூவி, நெய்யில் வருத்த பாதாம் பருப்பைப் போட்டு கிளற வேண்டும்.
அல்வா பதமாக வந்ததும் இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, சமமாகப் பரப்பி, கேக்குகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே மாம்பழ பர்பி