நார் இல்லாத மாம்பழம் & 1, பால் & 2 கப், சர்க்கரை & 1 கப், முந்திரிப்பருப்பு
& 3, உலர் திராட்சை & 10, குங்குமப்பூ & 1 சிட்டிகை.
பாலைக் காய்ச்சி ஆறவைக்கவும். பழத்தை தோலுடன் ஆவியில் வேக வைத்து, ஆறியதும் தோல், கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கி ஆறியதும் பால் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். சிறிது சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைத்து கரைத்து பாயசத்தில் ஊற்றி கலந்து, பரிமாறவும்.