1 கிலோ மக்ரூன் செய்ய, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல்
15 கோழி முட்டைகள் தேவை. முந்திரி,சர்க்கரையை நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின்
வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மை
யைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். இதற்கென கிரைண்டர் போன்ற இயந்திரத்தை தூத்துக்குடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை
ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும்
அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி
மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள்.
மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பதுதான் முக்கியம்.
கைதேர்ந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்படும்.
ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்
கொண்டு, அதற்குள் மாவை அள்ளிவைத்து,
கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட, சுருள்
வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு.வடிவம் கிடைத்ததும், பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில், மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்"ரெடி.