Author Topic: ரவா இடலி இது பெங்களூரு ஸ்பெஷல்  (Read 776 times)

Offline kanmani

 1கிலோ ரவா, அரைகிலோ உளுந்து, 50 கிராம் கடலைப்பருப்பு, நன்கு புளித்த 100 மிலி தயிர், 50 கிராம் பச்சைமிளகாய், கடுகு, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட்.

உளுந்தை அரைத்துக் கொள்ளவேண்டும். ரவையை நிறம்மாறும் பதத்துக்கு வறுத்து, உளுந்து மாவோடு உப்புச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சீவலைப் போட்டுத் தாளித்து, தயிரை ஊற்றி கலக்கி, கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக்கொள்ள வேண்டும். விரும்பினால் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம்.பின்னர் வழக்கம் போல இட்லித்தட்டில் ஊற்றி அவிக்க வேண்டியதுதான். இட்லி வெந்ததும் பரவுகிற வாசனை பசியைத் தூண்டும். சூடாக சாப்பிடுவதே சுவை.