Author Topic: வாழைப்பழ டிலைட்  (Read 886 times)

Offline kanmani

வாழைப்பழ டிலைட்
« on: November 28, 2012, 11:50:12 AM »
என்னென்ன தேவை?
ரொம்பவும் பழுக்காத, ஓரளவு கனிந்த வாழைப்பழம் - 3,
ஏதேனும் பிஸ்கட் தூள் - 1 கப்,
தேன் - கால் கப், துருவிய தேங்காய் - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வாழைப்பழத்தை நீளவாக்கிலோ, மூன்று துண்டுகளாகவோ நறுக்கவும். தேங்காய் துருவலை லேசாக வதக்கி, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். தேனுடன், எலுமிச்சைச்சாறு கலந்து வைக்கவும். பிஸ்கட் தூளுடன், தேங்காய் துருவலைக் கலந்து வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை இந்தத் தேன் கலவையில் தோய்த்து, பிஸ்கட், தேங்காய் துருவலில் பிரட்டி, அலங்கரித்துப் பரிமாறவும்.  இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையான அயிட்டம் இது.