Author Topic: முளை கட்டிய வெந்தயக் குழம்பு  (Read 950 times)

Offline kanmani

முளைகட்டிய வெந்தயம் - 1 கப்,
புளி - நெல்லிக்காய் அளவு,
வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள், பெருங்காயம் - சிறிது,
கடுகு - சிறிது.


வெந்தயத்தை சுத்தம் செய்து, முளை கட்டி வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் எல்லாவற்றையும் கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு, பெருங்காயம், முளைகட்டிய வெந்தயத்தை வதக்கி, புளிக்கரைசலையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுருண்டு வந்ததும் இறக்கவும்.