Author Topic: தேங்காய் பால் புலாவ்  (Read 1186 times)

Offline kanmani

தேங்காய் பால் புலாவ்
« on: November 27, 2012, 09:02:11 AM »

சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. அத்தகைய புலாவ் ரெசிபியில், நாம் தேங்காய் பால் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் மட்டும் இருக்குமாறு வைத்து, மீதமுள்ள எண்ணெயை எடுத்துவிடவும்.

பின்னர் அந்த எண்ணெயில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து, லேசாக வறுக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த பாலை குங்குமப்பூவில் சேர்த்து, குங்குமப்பூவை நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது தேங்காய் பால், பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து, பாலில் அரிசி வெந்து, நீர் சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

அரிசியானது வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான தேங்காய் புலாவ் ரெடி!