Author Topic: எதை கொண்டு வந்தாய்? கொண்டுபோக‌  (Read 823 times)

Offline தமிழன்

சூரியன் ஒளியை கொடுக்கிறது
 நம்மிடம் எதையும்
 எதிர்பார்ப்பதில்லை
 மேகம் மழையை தருகிறது
 எதையும் எதிர்பார்ப்பதில்லை
 மலர் தேனை தருகிறது
 எதையும் எதிர்பார்ப்பதில்லை
 
இயற்கை மனிதனிடம்
 எதையும் எதிர்பார்ப்பதில்லை
 மனிதன் தான் கொடுப்பதெற்கெல்லாம்
 பலனை எதிர்பார்க்கிறான்
 
தன் பெற்றோருக்கு
 செய்த கடமைகளை
 பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறான்
 மகளுக்கு கொடுத்த சீதனத்தை
 மகன் மூலம்
 எதிர்பார்க்கிறான்
 
யாரும் வரும் போது
 எதையும் கொண்டு வருவதில்லை
 போகும் போதும்
 எதையும் கொண்டு போவதில்லை
 நிர்வாணமாக வந்தோம்
 நிர்வாணமாகவே போகிறோம்
 
இடையில் வந்தவை எல்லாம்
 சமூகம் நமக்கு அளித்தவை
 எடுத்தை நாம் தான்
 கொடுக்க வேண்டும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
கரு நன்று தமிழன், கவிதையின் கட்டமைத்தவிதத்தில் அதிகமாய் கவனித்திருக்கலாம், கவிதையை போலல்லாமல் உரைநடைப் போலவெ இருக்கிறது

இது போன்ற‌ த‌த்துவார்த்தமான‌ க‌விதைக‌ளை க‌ட்ட‌மைக்கையில் அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் த‌மிழ‌ன், க‌விதை முழுக்க‌ ப‌ட்டிபார்க்க‌ வேண்டி இருக்கு

கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌

சிற‌ப்பான‌ க‌ரு, வாழ்த்துக்க‌ள்
அன்புடன் ஆதி

Offline தமிழன்

ஆதி இதை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்தது தான்.
நான் உங்களைப்போல பெரிய கவிஞன் இல்லை. நான் இன்னும் கத்துக்குட்டி தான். எனக்கு இலக்கிய நடை, உரை நடை எதுவும் தெரியாது. நான் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்ல நினைக்கிறேன். எனக்கு இந்த நடையை போதும்.
இப்போது நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட எல்லோருக்கும் எழுதில் போய் சேரக் கூடிய உரை நடையில் தான் கவிதைகள் எழுதுகிறார்கள். வேண்டுமானால் நான் அவர்கள் பெயர்களையும் அவர்கள் எழுதிய கவிதை நூல்களின் பெயர்களையும் தருகிறேன். வாங்கி வாசித்துப் பாருங்கள்.
நன்றி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அந்த பெரிய எழுத்தாளர்களின் பெயரைகளை நூல்களையும் தாருங்கள் தமிழன் வாசித்துவிட்டு விவாதிப்போம்

வசன கவிதை அறிமுக செய்து வைத்தவனே பாரதிதான் இல்லையா ? அதில் என்ன இலக்கிய நடை இருக்கிறது

அதில் வசனம் தான் இருக்கும்!!!

நான் சொல்ல வந்தவை உங்களுக்கு இன்னும் புரியவில்லை, நீங்கள் நூல்களை சொல்லுங்கள், அந்த எழுத்தாளர்களின் பெயரோடு !!!!
 
பெரிய எழுத்தாளர் என்று தபுசங்கர், பா.விஜய்  பெயரை எல்லாம் சொல்லாதீங்க‌
 
அது வசன கவிதை பற்றி தமிழில் முதலில் சுதேசி மித்திரனில் அறிமுகம் செய்து வைத்த பாரதிக்கு அவமானம்

இங்கே யாரும் பெரிய கவிஞன் இல்லை என்பதை நினைவில் கொள்க‌
இலக்கிய நடைவேறு கவிதை நடை வேறு
 
பேசுவது போல் கூட கவிதை எழுத முடியும்
 
கவிதை நடை என்றால் சந்தம், தொடை நயம், எதுகை, மோனை என்று தப்பாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல‌
 
நீங்கள் பெரிய கவிஞர் நூல்களை சுட்டுங்க, பிறகு பேசுகிறேன்

அப்புறம் விவாதிப்போம்
« Last Edit: October 19, 2012, 02:43:37 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline தமிழன்

பெரிய எழுத்தாளர் என்று தபுசங்கர், பா.விஜய்  பெயரை எல்லாம் சொல்லாதீங்க‌
 
அது வசன கவிதை பற்றி தமிழில் முதலில் சுதேசி மித்திரனில் அறிமுகம் செய்து வைத்த பாரதிக்கு அவமானம்


இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை.
இது வாதாடும் இடமும் இல்லை.
நான் யாரை சொன்னாலும் இவர் என்ன கவிஞனா என்று தான் சொல்ல‌ போகிறீர்கள்.
இந்த தபுசங்கருக்கும்,பா.விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகங்களும் நிறைய விற்பனையாகுகின்றன.
நீங்கள் உங்கள் பாணியில் எழுதுங்கள். மற்றவர் எழுதுவதை பாராட்டா விட்டாலும் குறை கூறாமல் இருங்கள். அது அவர்கள் எழுத வேண்டும் என்ற ஆசையை குழிதோண்டி புதைத்து விடும்.
எந்த குழந்தையும் பிறந்தவுடன் எழுந்து நடக்காது. அது போலத் தான் புதிதாக எழுத முனைபவர்களும்.
நன்றி,

 

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நீங்க சொன்ன பெரிய எழுத்தார்கள் யாருனு தெரிஞ்சுக்கனுமில்ல‌

வாசகன் இருப்பவர் எல்லாம் பெரிய ஆள் என்றால், பாரதியைவிட நாலாந்தர பத்திரிகளை வாசித்தவர்கள் அதிகம், அந்த பத்திரிகை ஆசிரியன் பெரிய ஆளா ?

இதுக்கு முன்னாடி ஒரு சில கவிதைகளில் பாராட்டினேனே அப்போ ஏன்னு கேட்டிங்களா ? மறுப்புத்தான் தெரிவிஞ்சீங்களா?

இங்கு பாணியை பற்றி யார் பேசினா ? பாரதி மாதிரி எழுத சொன்னோமா என்ன ?


கரு சிற்பானதுனு சொன்னதுக்கு அப்புறமும் எழுது வேண்டும் எனும் ஆசையை குழித்தோண்டி புதைக்கிற மாதிரி பின்னூட்டன்மு சொல்றது என்ன ? நீ பாராட்டினா மட்டும் பின்னூட்டம் போடுனு சொல்றீங்க‌

இது கவிதை இல்லை என்று சொல்வதற்கும், கவிதையின் கட்டமை பட்டி பாருங்கனு சொல்றதுக்கு வித்யாசம் இருக்கு

உங்களை போல பெரிய கவிஞன் இல்லைனு சொல்லி தனிநபர் தாகுதல் செய்தீங்க‌


அப்புறம் பெரிய கவிஞர் எல்லாம் இப்படித்தான் எழுதுறாங்கனு சொல்லி, அவங்க நூல் படிச்சு பாருனு சொன்னீங்க‌

அவங்க எல்லாம் கூட இப்படித்தான் எழுதுறாங்கனு சொன்னீர்ங்க, என்ன சொல்ல வரீங்க, பெரிய கவிஞர்கள் மாதிரித்தான் நீங்க எழுதுறீங்கனா ?

//எந்த குழந்தையும் பிறந்தவுடன் எழுந்து நடக்காது. அது போலத் தான் புதிதாக எழுத முனைபவர்களும்.
//

ஆனா அந்த‌ குழ‌ந்த‌ தூக்கிவிடுற‌வ‌ங்க‌ கைக‌ளை த‌ட்டிவிடாது இல்ல‌

அது போல் குழந்தை நடை பழகும் போது நான் நடனம ஆட போறேனு மேடை ஏறுவதுமில்லை
« Last Edit: October 19, 2012, 04:30:36 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Aadava

  • Guest
எதை கொண்டு வந்தாய்
இழப்பதற்கு

என்ற கீதாச்சாரம் ஞாபகம் வந்தது தமிழன்.

நல்ல கவிதை, சிவாஜி படத்தில் ரஜினி சொல்வார், போகும்போது இதைக் கூட (ஒரு ரூபாய் நாணயம்) உன்னால் கொண்டு போக முடியாது என்று. 

மேலும்

தமிழன்....  பெரிய கவிஞர் என்று யாருமில்லை. கவிதையில் சிறப்பான இடம் கொண்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். பாரதி, பிரமிள், நகுலன், சுகுமாரன் இப்படி.....

பா.விஜய் போன்றவர்கள் திராவிட இயக்கம் சார்ந்த மேடைப்பண்பு மிக்க மிகையுணர்ச்சிவச கவிதைகள் எழுதக்கூடியவர்கள், வைரமுத்துவும் அஃதே. அதற்காக அவர்கள் கவிஞர்களல்லர் என்று சொல்லவரவில்லை. அவர்களுக்கும் மேற்சொன்ன சிலருக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் இருவரையும் படித்தாலே விளங்கும்.

சுட்டுத் துளைத்த‌தால் தானே ம‌னித‌ன்
புல்லாங்குழ‌ல் ஆகிறான்


இது உங்கள் வரிகள்...

//மற்றவர் எழுதுவதை பாராட்டா விட்டாலும் குறை கூறாமல் இருங்கள்//

நீங்களே சொல்லிவிட்டீர்கள், நானொரு கத்துக்குட்டி என்று. ஆனால் இது மிகவும் தவறு.. நீங்கள் காலம் முழுக்கவும் கத்துக்குட்டியாகவே இருக்க ஆசைப்படுகிறீர்களோ என்று தோணுகிறது.. உங்களது குறைகளை சுட்டுவது மேதமைத்தனம் என்று நினைக்காதீர்கள்.. அடுத்த படைப்பு அந்த குறைகளைக் களைந்து ஓரளவு குறைகளற்ற கவிதை படைத்திருக்கிறோம் எனும் எண்ணம் வளர முயற்சி செய்யுங்கள்.

அதுதான் உங்கள் சார்ந்த உங்களுக்குள் இருக்கும் கவிஞனுக்கு நல்லது!

இதுக்குமேல உங்க இஷ்டம்.


///பேசுவது போல் கூட கவிதை எழுத முடியும்///

ஆதி... நான் ஒரு உதாரணம் தருகிறேன்... இது தமிழனுக்கு உபயோகமாக இருக்கும்.

என்னைய அடிங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டெமா வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ

நிங்கொ பாத்து வெச்சிருக்கெற
மாப்புள்ளைக்கெ என்னெயக் கட்டிக் வெய்ங்கொ
கட்டிக்கெறென்

அவனுக்கு புள்ளெ பெத்துத் தறச் சொல்லுங்கொ
பெத்துக்கெறென்

ஆனா
என்னிக்காவ்து ஒரு நா
எங்கெய்யாவது ஒருவாட்டி

அவரு வந்து ‘ வா போயர்றலாம்’ னு
கூப்பிட்டுப் போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பென்மேலெ சத்தியமாச் சொல்றென்

போட்டது போட்டபெடி கெடக்க
அப்பெடியே அவருகூடெப் போயிர்ருவென்…ஆமா.


- மகுடேஸ்வரன்
« Last Edit: October 20, 2012, 11:35:02 AM by Aadava »