Author Topic: காதலித்து பார் ....  (Read 714 times)

Offline Global Angel

காதலித்து பார் ....
« on: September 11, 2012, 08:28:33 PM »
காதலித்து பார் ....


கண நேரம் கூட
பிரியாது தவிப்பாய்
கண்ணாடியை -காதலித்து பார்


சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்


விடிகாலை வரை
விரல் நுனியில் நடமிடும்
கணனியின் தட்டு தளம் கூட
தட்டு தடுமாறும் சூடாகி - காதலித்து பார்


தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்


சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார்


நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்


மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்



பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார்


கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்


காதல் தேசத்தில்
கனவுகள் மட்டுமே நிஜம்
அதில் நீ ராணியாகு -நிஜத்தில்
ஜாசகி ஆகும் வரை

வாழ்த்துக்கள் ..
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதலித்து பார் ....
« Reply #1 on: September 11, 2012, 08:47:50 PM »
காதலித்து பார் ஒரு பெண்ணின் பார்வையில் எள்ளலும் எதார்தமும் நிறைந்து

//சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்
//

பெண்களுக்கே உள்ள கவலை, ஆனால் கரும்புள்ளிகளை காதலிக்கத்  தெரிந்தவர்கள் என்றே நினைக்கிறேன்

//தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்
//

இந்த இடத்திலும்

//மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்
//

இந்த இடத்திலும் சத்தமாய் சிரித்துவிட்டேன்


//சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார் //

காதலிக்கும் யாவர்க்கும் உள்ள அச்சம், எனினும் பெண்களுக்கு இன்னும் அதிகமாய் இருக்கும் போலும்

//நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்
//

மிக எதார்த்தமான நிதர்சனமான வரிகள்

//பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார் //

சுருக்கென கோவம் அதிகமாய் வருமோ பெண்களுக்கு, ஆண்களுக்கு அப்படியில்லை, 10 மணிக்கு வர சொன்னால் 9 மணிக்கே போய் 11 மணி வரைக்கும் வர போரவங்களுக்கு எல்லாம் வழிகாடியாகவும், வேடிக்கை பொருளாகவும் ஆகி, வந்தவுடன் ஒரு குளிர்வு குளிர்ந்து அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கிளம்புறேன் நேரமாகுது எனும் போது 2 மணி நேரம் காத்திருந்தத சொல்லவும் முடியாம மெள்ளவும் முடியாம மையத்துல மண்டைய ஆட்டி, அடுத்த முறையாவது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் பேசுற மாதிரி வா என்று சொல்லி தேவுடு காத்ததை எல்லாம் மறைத்துக் கொண்டு வழியனுப்பி வைக்கும் பொறுமைசாலிகள்

//கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்
//

அப்பட்டமான உண்மை, இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்குள் அனைவரும் படும் பாடு இருக்கிறதே, சொல்லி மாலாது, அவனவனின் நடுக்கம் அவனவனுக்குத்தான் தெரியும், அந்த வலி, பயம், குழப்பம், பதட்டம், போராட்டத்தை, மிக சாதாரணமாக சொல்லிட்டீங்க, இதற்கு தனி பாராட்டு

மிக நல்ல கவிதைங்க, வைரமுத்து கவிதை போலல்லாமல் தனிச்சுவை

அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: காதலித்து பார் ....
« Reply #2 on: September 11, 2012, 08:58:29 PM »
ஹஹஹாஹ் ... திடீர்னு தோணிச்சு ... அட காதலிக்கிறத பத்தி எதா போடலாம்னு .. எல்லோரும் பசங்களத்தான் போடுவாங்க .. அதுதான் நா பொண்ணு காதலிச்சா என்னாகும்னு ஒரு கர்ப்பனை... நானே சிரிச்சேன் நீங்க சிரிச்ச இடங்களில் ... ஆமாங்க பொண்ணுகளுக்கு அடிபடையவே சந்தேகம் அதிகம் ... அதனால அப்டி எழுதினேன் ....

பசங்க ஒரு பொண்ணு காதலிக்கும் வரைதான் நீங்க சொல்ற எல்லாம் ... அவளும் உண்மையாவே காதலிகிறது தெரிஞ்ச ... எல்லாம் தலைகீழகும் .. அதனால்தான் பெண்கள் அவ்ளோ சீக்ரம் வெளிப்படுதுறது இல்ல ... நாங்க உஷாருங்கோ ....



நன்றிங்க ... வைர முத்து கவிதை படிச்சு ரசிச்சிருக்கேன் ... அத உல்ட்டா பணனும்னு நினைப்பேன் ...  ஆனா உண்மையே வந்திடிச்சு ... ஹிஹி

ஆமாங்க கோபம் வரும் ... இல்லன எவன் மதிக்குறான் .... ஹஹஹா
« Last Edit: September 11, 2012, 09:04:05 PM by Global Angel »