Author Topic: நன்னாளாகட்டும் நாளைய நாள்  (Read 674 times)

Offline Tamil NenjaN

மலரும் பூவாய் மலரட்டும்
நாளைய பொழுது
வாசம் வீசும் மல்லிகையாய்
தவழட்டும் ஒரு புன்னகை
பூரிப்புகள் தவழட்டும் மனதில்

அனுபவங்கள் புதிதானால்
சரித்திரமும் புதிதாய் படைக்கலாம்
இலக்குகள் தெளிவாக இருந்தால்
பூரணத்துவம் ஆகலாம்
நிதமும் பூத்திடும் முயற்சிகள்

நீவிடும் பூபாளமாய்
பொழுதுகள் மலர்ந்தால்
நாளைய பொழுதை
நாம் ஆளலாம்
எட்டுத்திக்கிலும்
வெற்றிக் கொடி நாட்டலாம்
கோள்களை வசப்படுத்தி
வானையும் தொட்டு வரலாம் 

நம்பிக்கை மனதில் இருந்தால்
வெற்றிகள் தூரமில்லை
முயற்சியில் உறுதியாய் இருந்தால்
தோல்விகள் இல்லை வாழ்வில்

வாழ்வதற்குத்தான் இந்த வாழ்க்கை
துவண்டு போனால்
அலையடித்து ஓயும்
துயரங்கள் கண்டு... 
வெற்றிப்படிகள் ஏறி
விண்ணை தொட
முடியாது நண்பா

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote

நம்பிக்கை மனதில் இருந்தால்
வெற்றிகள் தூரமில்லை
முயற்சியில் உறுதியாய் இருந்தால்
தோல்விகள் இல்லை வாழ்வில்


நம்பிக்கையூட்டும்  கவிதை இனிமையான வரிகள் நன்று தமிழ் நெஞ்சன் தொடரட்டும் உங்கள் பயணம் 
                    

Offline Tamil NenjaN

thank you very much global angel