உயிரோடு ஓர் உயிராக
ஒன்றில் ஒன்றாக
கலந்தவனே ....
என்னில் கரைந்தவனே ...
எலும்போடு எலும்பாக
என்
சதையோடு சதையாக
என்
நரம்போடு நரம்பாக
என்
ரத்தத்தில் ரத்தமாக
என்
உடல் முழுதும் கலந்தவனே
என்
உயிரிலும் கரைந்தவனே
நினைவோடு நினைவாக
என்
கனவோடு கனவாய்
என்
பேச்சோடு பேச்சாய்
என்
மூச்சோடு மூச்சாய்
என்னிலே என்னை தேடினாலும்
உனைத்தான் காண கூடும்
நீ இன்றி ஒரு நொடியும்
நான் வாழ்த்திட கூடுமோ ?
நீ இல்லா வாழ்வுதனை
நான் வாழ்த்திட வேண்டுமோ ?
வாழ்வில் எதை இழந்தாலும்
உன்னை இழந்திடுவேனோ ?
எனக்காக வாழ்பவன் நீ
உன் அன்பிலே விழ்ந்தவள் நான்
வருவேன் என்று கூறி
தூர திசையில் நின்று
என் நெஞ்சை ஏங்க வைத்தாயே
எப்போது நீ வருவாயோ
எப்போது உன்னை நான் காண்பேனோ