Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்… (Read 40 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222885
Total likes: 27754
Total likes: 27754
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…
«
on:
July 23, 2025, 09:03:27 AM »
1. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை... உங்கள் பிரச்சினைகள் உட்பட.
2. சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
3. சிரிப்புதான் வலிக்கு மருந்து.. சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.
4. கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.
5. உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…
6. இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.
7. என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.
8. எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.
9. பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.
10. கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
11. ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.
12. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.
13. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
14. எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.
15. நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்..
16. நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.
17. வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல.. அனுபவிப்பதற்கு.
18. நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.
19. உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.
20. புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
21. விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.
22. ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.
23. நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.
24. அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.
25. கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…