Author Topic: மாடு என்றால் செல்வம் என்று பொருள்  (Read 10 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1260
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
மானிடன் வாழ உணவு அவசியம் அது தொடர்ந்து கிடைக்க உழவுதொழில் அவசியம் என்பதை உணர்ந்திருந்த இந்து சமூகத்துக்கு மாடுகளின் அவசியமும் புரிந்தது

மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை என்பதை உணர்ந்த அச்சமூகம் அதை "செல்வம்" என கொண்டாடியது, மாடு என்றால் செல்வம் என்று பொருள்

பாரதகண்டம் முழுக்க மாடுகள் போற்றி புகழபட்டன, கண்ணன் எனும்  அவதாரம் அதன் அவசியம் கருதி அக்குலத்திலே வந்து அதை உயர்த்தி நின்றான்

மாடுகள் அவ்வளவு அவசியமா?

ஆம், மாடுகளின் தேவை மானிட குலம் இருக்கும் வரை உண்டு.  விவசாயத்துக்கு இன்று டிராக்டர்கள் வந்துவிட்டாலும் அன்று உழவு வண்டி இழுப்பு என எல்ல்லாவற்றுக்கும்  காளைகளே பயன்பட்டன, இன்று அவை அந்த தொழிலுக்கு பயன்படாவிட்டாலும் மாட்டு சந்ததி அவைகளாலே பெருக வேண்டும்

காளைகள் மிகவும் அவசியம் என்பதால் அதை சிவனின் வாகனமாக கருதி காக்க சொன்னது இந்துமதம், ரிஷபம் சிவனின் வாகனம் என்றும், நந்தி என்றும், கோவில் காளைகள் என்றும் பல வகையாக அவற்றை போற்றினார்கள்

இதனால் பலமான கன்றுகள் பிறந்து அவை காலம் காலமாக மாடுகள் பெருகி வந்தன‌

பசுக்களின் பலன் ஒன்றல்ல இரண்டல்ல, பால் என்பது ஒரு அற்புதமான உணவு, மானிட உடலுக்கு மிக மிக பலனளிக்கும் உணவு

இதனாலே தேரையர் முதலான சித்தர்கள் "பாலுண்போம், பால் பொருட்கள் உண்போம்" என அழகாக சொல்லி வைத்தார்கள்

உஷ்ண பிரதேச நாடுகளில் மானிட உடலை குளுமையாகவும், குளிர் பிரதேசங்களில் மானிட உடலை சூடாகவும் பலமாகவும் வைத்திருக்கும் ஒரு பானம் பால்

பால் என்றால் வெறும் பால் மட்டும் அல்ல, தயிர் நெய் என அதன் பலன்கள் ஏராளம். பாரதம் போன்ற உஷ்ண பிரதேசங்களில் தயிரும் நெய்யும் உடலுக்கு குளிர்ச்சி

சுத்தமான தயிரும் நெய்யும் சேர்த்து கொண்ட வரை பாரத மக்களுக்கு ஒரு நோயுமில்லை

அரிசி என்பது உடலுக்கு குளுமையூட்டும் உணவு, அதில் தயிர்கலந்து உண்டபொழுது உடலில் உஷ்ணம் கட்டுபட்டது, உஷ்ணம் கட்டுபட்ட உடலுக்கு எளிதில் நோய் வராது

இந்த ரத்த கொதிப்பு இன்னபிற நோய்களுக்கெல்லாம் மிக பெரிய காரணம் உஷ்ண கோளாறே, ஆனால் மேல்நாட்டு மருத்துவம் அப்படி ஒன்றை ஒப்புகொள்ளாது அல்லது தெரியாது

பனங்கள்ளும் தயிர்கஞ்சியும் குடித்தவரை தமிழனுக்கு ரத்தகொதிப்பு என்றால் என்னவென்றோ அதற்கான மாத்திரை என்னவென்றோ தெரியாது, அது அவசியமில்லை

நல்லெண்ணெய் குளியல் அவனை இன்னும் குளிர்ச்சியாக்கியது, நீண்ட தலைமுடியில் பூசபட்ட அந்த எண்ணெய் எல்லா வகையிலும் தலையினை குளிர்ச்சியாக்கி உடலையும் குளிர்ச்சியாக்கியது

இதனையெல்லாம் தொலைத்துவிட்டுத்தான் குருட்டு சமூகமாக மாத்திரையிலும் மருந்திலும் இச்சமூகம் தத்தளிக்கின்றது

கோதுமை உடலுக்கு சூடு என்பதால் குளிர்பிரதேச உணவாயிற்று, ஆனால் அளவுக்கு மிஞ்சிய சூடு நோயினை ஏற்படுத்தும் என்பதால் நெய் சேர்த்து உண்ண சொன்னார்கள்

வட இந்திய உணவு வழக்கம் இதுதான், அரேபியாவில் இதை வெண்ணெயும் தயிரும் பிடித்து கொள்கின்றது

இரண்டாம் உலகபோருக்கு பின்புதான் தமிழருக்கு சப்பாத்தி அறிமுகமாயிற்று, ஆனால் அதை நெய் சேர்க்காமல் உண்ண கூடாது என்பது தமிழனுக்கு தெரியவில்லை, விளைவு புது புது நோய்கள் அவனை தாக்கி பாடாய் படுத்துகின்றன, மருத்துவமனை நிரம்பி வழிகின்றது

பசுக்கள் பெருக வேண்டும் என்றால் சும்மா மானிடன் பெருக்கமாட்டான் என்பதால் அதிலும் ஒரு நுணுக்கம் செய்தது இந்துமதம்

ஆம், தெய்வங்களுக்கு பால் , தயிர், நெய் எல்லாம் அபிஷேகத்துக்கு அவசியம், நெய் விளக்கு அவசியம் என அது வலியுறுத்திற்று

பாலும்,  தயிரும், நெய்யும் தெய்வத்துக்கு கொஞ்சமும் அவசியமல்ல, ஆனால் தெய்வத்தின் பெயரை சொல்லியாவது மாடு வளர்க்க மாட்டானா அவனும் பாலும் தயிரும் நெய்யும் உண்ணமாட்டானா எனும் அக்கறை அன்றி வேறல்ல‌

பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம் என சொல்லி அதை குடிக்க வைத்ததும் இதனாலே

தெய்வத்துக்கு வைக்கபடும் நைவேத்தியங்களில் நெய் இருக்க வேண்டும் என்பதும் இதனாலே, உணவில் நெய் சேர்க்க வேண்டும் என்பதும் இந்த ஏற்பாடே

பசுவினை கொல்வது பஞ்சமாபாதகம் என்றதும் இதற்காகவே, ஒரு பசு கொல்லபட்டால் ஏராளமான பாலும் நெய்யும் உருவாகிவருவதை ஒருவன் தடுக்கின்றான், அது பாவத்திலெல்லாம் பெரும் பாவம் என்றது இந்துமதம்

"நெய் இல்லா உண்டி பாழ்" என ஓள்வை சொன்னாலும் ஏற்காதவன், தெய்வத்துக்கு அவசியம் என்றால் ஏற்பான் அல்லவா?

ஆம் இந்துக்களின் ஒவ்வொரு ஏற்பாடும் தெய்வத்துக்கானது அல்ல, முழுக்க மக்களுக்கும் அவர்கள் உடல் நலத்துக்குமானதே

பால் என்பதும் மிகசிறந்த கிருமி நாசினியும் கூட, ஆலய சிலை அபிஷேகம் முதல் அயிரை மீனை கழுவ அது பயன்படுவது அப்படியே

இன்றும் சீக்கிய சமூகம் தலைமுடியினை பாலில் கழுவும் செயலில் அதை காணலாம், ஆம் பால் என்பது சுத்தமும் சத்தும் கொடுக்கும் விஷயம்

பால் பற்றி சொல்லும் பொழுது வெண்ணெய் பற்றி சொல்லியாக வேண்டும், மானிட உணவில் மகா இன்றிமையாதது வெண்ணெய். அது மூளைக்கும் உடலுக்கும் பலம் கொடுக்கும் உணவு

கண்ணன் இதை வெண்ணெய் உண்டு நிரூபித்தான், அவன் வெண்ணையினை திருடினான் என்பது பசியியிலோ ருசியிலோ அல்ல, அது மகா அவசியமான உணவு என குறிப்பால் சொன்னான் கண்ணன்

ஐரோப்பியர் உணவு வகைகளில் வெண்ணெய்க்கு எக்காலமும் தனி இடம் உண்டு, தவிர்க்கமுடியா இடமும் உண்டு

உலகில் விஞ்ஞானம் டிராக்டரை தரலாம், இழுவை வண்டிகளை தரலாம், மாடு இழுக்கும் கமலைகளுக்கு பதிலாக மின்மோட்டார் வரலாம்

ஆனால் பசுக்கள் இல்லாமல் பாலும் தயிரும் வெண்ணையும் நெய்யும் ஒரு காலமும் வராது

மாடுகளின் மிகபெரிய கொடை சாணம், வீணாக வளரும் புல்லையும் வயலில் கழிவாகும் வைக்கோலையும் தின்று அவை சாணம் எனும் மிகபெரிய உரத்தை கொடுக்கின்றன. ஆம் வீணானதெல்லாம் தான் உண்டு மானிடனுக்கு பாலும் உரமும் கொடுக்கும் அற்புத உயிரினம் பசு.

பசுஞ்சாணமும் ஹோமியமும் கலந்த அந்த அற்புத வஸ்து உரம், கிருமி நாசினி என மானிடரை காக்கின்றது

காளைகளும் பசுக்களும் மகா முக்கியம் என்பதால் ஆலயம் எனும் பெயரை சொல்லி அதை வர

இதற்குத்தான் பசுபாதுகாப்பும் காளை பாதுகாப்பும் அவசியமாகின்றது, இதை என்றோ உணர்ந்துதான் இந்து ஆலய தேவைகளுக்கு பால் பொருட்கள் அவசியம் என ரகசியாமக பசு வளர்ப்பினை ஊக்குவித்தது

இதை நுணுக்கமாக உணர்ந்த வெள்ளையன் பசுவதையில் ஈடுபட்டான், 17ம் நூற்றாண்டில் இந்தியாவினை பிடிக்க வந்த அவனுக்கு இரு விஷயங்கள் இருக்கும் வரை இந்தியாவினை சீரழித்து வீழ்த்தமுடியாது என்பது புரிந்தது

சீனாவில் போதை மருந்தினை பரவவிட்டு அவர்களை பலவீனமாக்கி ஹாங்காங்கை கைபற்றிய அவனுக்கு இந்தியாவில் சில போதைகளை பரப்புவது எளிதானது

அதில்தான் இந்துமதம் பற்றிய மிக மோசமான விமர்சனம் அதன் ஏற்பாடெல்லாம் மூடதனமானது எனும் தவறான கற்பிதங்கள்

இந்துமதம் வீழும் பொழுது நீர்நிலைகள் வீழும், விவசாயம் வீழும், பசு அழியும்

இந்த மூன்றும் அழிந்தால் இந்தியா வீழும், பின் அதை தன்னால்தான் காக்க முடியும் என அவனால் அவன் பொருளையும் இன்னும் பலவற்றையும் விற்க முடியும்

ஆம், பசு கூட்டம் குறைந்தது பாலும் நெய்யும் தயிரும் குறைந்தது இந்தியாவில் நோயாளிகள் அதிகரித்தனர், மருந்து எனும் பெயரில் சம்பாதித்தான் வெள்ளையன்

நீர்நிலை சரிந்தது, வயல்கள் குறைந்தன. உணவு எனவும் ஒட்டுவிதை எனவும் மரபணுமாற்ற்பட்ட அதிக விளைச்சல் எனவும் சொல்லி அவனால் விதைகளும் விஷமும் இங்கு விற்க முடிந்தது, நோய்கள் அதிகரித்தன‌

கோசாலை எனும் பசுக்கள் குறைந்தன, ஆனால் பால் இந்திய பானமாக இருந்தது. அதில் தன் வருமானம் பெருக நைசாக காபி, தேயிலை என கலந்துவிற்றான் வெள்ளையன்

ஒரு கட்டத்தில் தமிழரின் பானமான பாலும் மோரும் மறைந்து காபி டீ கோலா என மாறி இன்று நோய்பட்ட பெரும் சமூகம் நிறைந்து நிற்கின்றது

கோவில் காளையும் கோசாலையும் மறைந்ததில் சாணம் குறைந்து செயற்கை உரத்துக்கு பாரதம் தத்தளிக்க ராசாயாண உரத்தை நம்மிடமே கொடுத்து நம்மை சுரண்டினான் வெள்ளையன்

ஆக இந்து ஆலயங்கள் சரிய சரிய இந்தியர் வாழ்வே சரிந்தது என்பதை ஒருகணம் நினைத்து பாருங்கள் மாபெரும் அவமானமும் குற்ற உணர்ச்சியும் உங்களை சூழ்ந்து கொள்ளும்

இங்கு இந்துமதத்தை மீட்டெடுக்காமல் எதுவும் எக்காலமும் சாத்தியமில்லை அந்த அளவு கலாச்சாரம், உணவு, வாழ்வு, மனநலம் , விவசாயம், ஆரோக்கியம் என எல்லாவற்றோடும் அது பின்னி பிணைந்து நிற்கின்றது

இதனால்தான் அன்றைய பாரதம் மாடுகளை கொண்டாடியது, அதை கோ மாதா என்றது, ரிஷ்பம் என நந்தி என வணங்கியது

வடக்கே அதை இந்துக்கள் தாய் என கொண்டாடியதன் தொடர்ச்சிதான் மாட்டு பொங்கல்

அன்று பசுக்களுக்கெலாம் அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள், காளைகளுக்கெல்லாம் பெரும் பூஜை நடக்கும்

ஏறு தழுவுதல் எனும் விளையாட்டு இன்றுதான் நடக்கும்

அதற்கு பல காரணங்கள் இருந்தன, முதலாவது மாடுகளோடு பழகும் சமூகத்துக்கு அதை அடக்கும் வித்தையும் தெரிய வேண்டும், இரண்டாவது பயமில்லாத வலுவான உடல் கொண்ட‌ வாலிபர்களை உருவாக்குவது

பயமில்லா இளையதலைமுறையே நாளை ஆபத்து என்றால் சமூகத்தை காக்க எழுந்து நிற்கும்

இதில் இன்னொரு நுணுக்கமும் இருந்தது, ஜல்லிகட்டுக்கு வளர்க்கபடும் காளைகள் மிக ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருந்தன, அந்த காளைகளால் எளிதில் சந்ததி பெருக்க முடியும் அதுவும் வலுவான சந்ததியாக பெருக்க முடியும்

காளையினை அடக்குபவனுக்கு பெண் கொடுப்பதும் இந்த மரபின் ஒரு வகையே

இங்கு மாடுகள் பாரதம் முழுக்க போற்றபட்டன, மாட்டுகறி உண்ணும் வழக்கம் இந்தியருக்கு இல்லை, வயதான இறந்த மாட்டை மட்டும் சில இனங்கள் உண்டன, மற்றபடி கழுகுதான் உண்ணும்

மாட்டுகறி என்பது ஆப்கானியரால் உணவாகவும் வெள்ளையனால் இந்தியாவின் விவசாய முதுகெலும்பினை உடைகவும் இங்கு அறிமுகமான ஒன்று

பசுக்கள் கொல்லபட கொல்லபட இத்தேசம் சீரழிந்தது, அது தடுக்கபடல் வேண்டும்

வடக்கே பசுக்களுக்கு இருக்கும் அதே மரியாதையும் வணக்கமும் தெற்கே ஜல்லிகட்டு நடக்கும்பொழுது அழகாக தெரிகின்றது

இச்சமூகம் மாடுகளை தெய்வத்துக்கு நிகராக கொண்டாடியதை புரிந்து கொள்ளமுடிகின்றது

பாரத திருநாடு நோயில் இருந்து விடுபட பால் பொருள் பெருக வேண்டும், ஆரோக்கியமான உணவு பெற இயற்கை விவசாயம் அவசியம் அதற்கு கட்டாயம் சாணம் அவசியம்

இதெல்லாம் மாட்டுகறியினை தடுத்து கோசாலைகளை பெருக்கி அவற்றை பாதுகாத்தால் நடக்கும்

அதை இந்துமதம் அழகாக செய்யும் என்பதால் அம்மதத்தை மீட்டெடுத்தல் என்பது அவசியம்

அக்காலத்தில் ஒவ்வொரு இந்துகோவிலுக்கும் தனியே நந்தவனமும், கோசாலையும்  இருந்தது, ராஜராஜ சோழனின் சாவா மூவா பேராடுகள் எனும் கல்வெட்டும், மாடு கொடுத்து நெய்யால் விளக்கேற்ற சொன்ன காட்சிகளும் அதை சொல்கின்றன‌

இந்துமதம் மீண்டெழுந்து, நந்தவனங்களும்,கோசாலைகளும் பெருகட்டும்

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மாட்டுபண்ணை அமையட்டும், அப்படி அமையபெற்றால் ஆலயமும் சிறக்கும் மாடுகளும் வளரும், மக்களுக்கும் எல்லாம் ஆரோக்கியமாக கிடைக்கும் நோய்கள் ஒழியும்

ஜல்லிகட்டினை பார்க்கும் பொழுது எழும் சிந்தனைகள் அதுதான் , கோ பூஜையும் ஜல்லிகட்டும் ஏற்படுத்தபட்ட காரணமும் அவைதான்

அவை இன்னும் மீட்டெடுக்கபட வேண்டும்

ஜல்லிகட்டு நடக்கும் பொழுது ஒரே ஒரு பாண்டிய மன்னனை நினைத்து பார்க்கின்றேன், ஜல்லிகட்டு நிலைத்து நிற்க அவனே காரணம்

ஆம், ஜல்லிகட்டு இந்தியா முழுக்க இருந்தது கண்ணன் ஏழு காளைகளை அடக்கித்தான் நப்பின்னையினை திருமணம் செய்தான் என்கின்றது அவன் வரலாறு, ஆண்டாளும் இதை பாடினாள்

அப்படி இந்தியா முழுக்க இருந்த ஜல்லிகட்டு புத்த சமணங்களால் அறவே அழிந்தன, அசோகன் காலத்தில் அது ஜீவகாருண்யம் என தடுக்கபட்டது

சமணம் இன்னும் அழகாக அதை செய்தது

இந்தியா முழுக்க ஆண்ட சமணம் தமிழகத்தையும் தொட்டு இவைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தன, பவுத்தர் காலத்தில் காஞ்சியிலும் அதை அடுத்து சோழநாட்டிலும் இந்துமதம் சரியும் பொழுது ஜல்லிகட்டும் அழிந்தது

மதுரையில் அதற்கு ஆபத்து கூன்பாண்டியன் காலத்தில் வந்தது, அவனையும் சமணர் ஆட்டி வைத்து அவனை சமணராக்கி அங்கும் சைவத்தை ஒழித்து காளை விளையாட்டை ஒழிக்கும் அளவு அவன் மனதை மாற்றினர்

அவனுக்கு முதுகில் கூன் இருந்தது, அதனால் கூன்பாண்டியன் என்றானான், அவனை வளைத்த சமண கூட்டம் மதுரை ஆலயத்தையும் பாழ்படுத்தி போட்டது

பின் மன்னனுக்கு சூலை நோய் எனும் வயிற்றுவலி நோய் தாக்கிற்று, சமணரால் அதை குணமாக்க முடியவிலை

கூன் பாண்டியனின் மனைவியான மங்கையரசி நாயனாரும், குலச்சிறை நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தியினனை அழைத்து வந்து சமணருடன் போராடி அவனை நலமாக்க முயன்றனர்

திருஞான சம்பந்தரின் மதுரை ஆதீனம் எரிக்கபட்டு அவர் மேல் கொலைமுயற்சி நடந்ததெல்லாம் அப்படித்தான்

ஆனால் அதையும் மீறி மன்னனை குணமாக்கி சமணரை விரட்டி அடித்தார் திருஞானசம்ப்ந்தர், மன்னனின் கூன் முதுகும் சம்பந்தரால் நிமிர்ந்தது

அவன் நின்றசீர் நெடுமாறன் என்றானான்.

மன்னன் சமணத்தை தலைமுழுகி சைவம் ஏற்றான், அது  பொறுக்காத சமண கூட்டம் தன் வட இந்திய அரசுகளோடு சேர்ந்து சேரமன்னனின் நாடுவழியாக தெற்கில் இருந்து அவனை தாக்கியது

சிவன் அருளில் திருநெல்வேலிபக்கம் பெரும் போர் புரிந்து அவர்களை முறிய அடித்தான் அவனால் மதுரையில்
சைவம் காக்கபட்டு இந்த ஜல்லிகட்டும் தொடர்ந்தது

நின்றசீர் நெடுமாறன் நாயனார் நிலையும் அடைந்தார்

ஆம் அந்த நாயனாரால் மட்டுமே இங்கு சமணம் ஆட்டம் போட முடியவில்லை இதனாலே இந்தியரின் பெரும் தொன்மையான ஜல்லிகட்டு இங்கு மட்டும் நிலைத்தது

மதுரை எக்காலமும் சிவன் பூமி என்பது இதனாலேதான், சிவன் காத்த விளையாட்டு அது

இன்று பாரதத்தில் ஜல்லிகட்டு எனும் காளை விளையாட்டு மதுரை பக்கம் நடக்கின்றது , நாயனாரால் காக்கபட்டு பின் நாயக்க மன்னர்களால் தொடர்பட்டு இக்காலம் வரை நடக்கின்றது

அந்த நாயானாருக்கு இன்றும் மதுரை கோவிலில் சன்னதி உண்டு

அவர் காலம் பின் நாயக்கர் காலம் என தொடர்ந்த அந்த விளையாட்டு இஸ்லாமியர் கிறிஸ்தவ ஆட்சியில் சீரழிந்து, திமுக காங்கிரஸ் ஆட்சியில் அழியும் நிலைக்கே வந்தது

ஆனால் பாஜக எனும் இயக்கம் ஏற்படுத்திய எழுச்சியால் இந்து விரோத இயக்கமெல்லாம் இம்முறை அலறுகின்றன. திருகுறள் எனும் இந்து நூலை தமிழர் நூல் என மாற்ற முயல்வது போல இந்து பண்டிகையான பொங்கலையும் இந்துக்கள் விளையாட்டான ஜல்லிகட்டையும் தமிழர் விளையாட்டு என சொல்லும் அக்கும்பல் பரிதவிகின்றது

இதனால் காங்கிரஸ் தலமையும் திமுக தலமையும் அலறி அடித்து அவனியாபுரம் நோக்கி ஓடிவருகின்றது, இதனால் இந்துமக்கள் எழுச்சி பெற்றுவிட கூடாது என அஞ்சுகின்றன‌

தமிழனின் கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்பதை மறைத்த அக்கூட்டம் அந்த உண்மை பரிதவிக்கும் பொழுது அலறுகின்றது

அவர்கள் அலறட்டும்

பகவான் கண்ணன் விளையாடிய ஏறுதழுவல் எப்படி இருக்கும் என்பதை அகில இந்திய பாரதமும் இப்பொழுது பார்க்க தொடங்கிவிட்டது, இனி இந்துக்களின் பெரும் பிம்பங்கள் அந்த மதுரை நோக்கி வருவார்கள்

ஜல்லிகட்டு என்பது இந்துக்களின் விளையாட்டு, இந்துமதம் மாடுகளின் அவசியத்தை சொல்லி அதை வணங்கியதை உலகுக்கு சொல்லும் விளையாட்டு

நாம் அதை ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றோம், அடங்க மறுத்து சீறிபாய்ந்து தன்னை அடக்க நினைப்பவனை தூக்கி எறிந்து சிலிர்த்து நிற்கும் காளைகள் புத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம், போலி நாத்திகம் என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சிலிர்த்து நிற்கும் சைவ மதத்தை அப்படியே குறிக்கின்றன‌

ஒவ்வொரு காளையும் துள்ளி வரும் பொழுது சைவம் மீண்டுவரும் காட்சியே தெரிகின்றது

காளை சிவனின் வாகனம் என இந்துக்கள் சொல்லி வைத்ததில் ஆயிரம் அர்த்தம் இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது, அர்த்தமுள்ள இந்துமதம் என கவியாசான் சொன்னது நிச்சயம் கண்ணனின் வாக்கு.