தொப்பிற்கொடியை
கழட்டிவிட்ட நொடிதனில்
என் வாழ்வில்
கலந்துவிட்ட உறவிது
தாயிற்கு பின்
உனை தாங்க
காத்திருக்கிறது
ஓர் உறவு  என
உணர்த்திய தருணம்
அது போலும்
நற்செய்தி, எச்செய்தி
ஆன போதும் - நாம் சொல்ல
தேடும் ஓர் உறவு இது
தந்தை என்றும்
தங்கை என்றும்
அண்ணன் என்றும் 
தம்பி என்றும் 
உறவுகள் பல இருக்க
விழாக்களில்
நம் கண் தேடும்
உறவிது
நீ இல்லாமல் 
வீட்டில் 
ஒரு நிகழ்வும் 
நடந்துவிடாது 
தாவணி வயதில்
பல இரவுகள்
என் கனவில் வந்து
தூக்கம் தொலைக்க வைத்த
உறவிது
கிண்டல், கேலி ,
சண்டை ,சரண் என
தோழர்கள் போல உறவாடிட
கிடைத்த உறவிது
பொய் காரணங்கள் பல தேடி
தொலைந்திடும் உறவுகளில்
நிழல் போல நம் வாழ்வில்
தொடர்ந்திடும்
உறவிது
பிறந்தநாளில் 
நான் வாங்கி வந்த 
வரம் நீ 
தாயிற்கு நிகரானவன்
என்பதாலேயோ
இந்த உறவிற்கு பெயர்
தாய்மாமன்
இப்படிக்கு 
உன் அக்கா பொண்ணு 
****JOKER****