Author Topic: இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?  (Read 5022 times)

Offline Global Angel

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?



மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.
 
 
 
மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.
 
 
 
எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள்.

 
 
இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.
                    

Offline gab

ஆம் உண்மை தான்.இரவில் மரத்தடியில் படுப்பதை தவிர்த்துக் கொள்வது து நல்லது. அறிவியல்பூர்வமான செய்தி . தகவலுக்கு நன்றி Global Angel.