Author Topic: இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்  (Read 559 times)

Offline Guest

கருவில் உயிர் சுமந்து கற்பனையில்
உரு கொடுத்து  கல்லறை செல்லும் வரை
கனிவான பாசத்தை ஊட்டி - தாயானவளே

மட்டில்லா மகிழ்வளித்து  மனதெல்லாம்
நிறைவளித்து  மருமகள் என்ற பேர் பூத்து
- மனைவியானவளே

உயிரோடு உயிராகி உணர்வோடுகலந்த
உன்னத உறவாகி - சகோதரியானவளே

பெற்றோரின் பாசம்  பெற்று பெற்றோருக்காய்
பாசத்தை ஊட்டி பெருமையின் சிகரமாகி
- மகளானவளே

இத்தனை உருப்பெற்றும்  அத்தனையும்
சிறக்கவரும் - பெண்மையானவளே

உன்னை போற்றிடும் நாளிது உன்னை
வாழ்திடும் நாளிது ..

அனைத்துலக ஆண்கள்
சார்பில் - அகம் நிறைந்த இனிய பெண்கள் தின
வாழ்த்துக்கள்
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
arumai nanba