Author Topic: கவியா பிழையா !!  (Read 1410 times)

Offline KrisH

கவியா பிழையா !!
« on: March 07, 2018, 12:56:01 AM »


படித்தேன் கவிதைகள் பல
புரிந்தன அதில் சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத கொண்டேன் எண்ணம்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன் என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால் என்ன உருவாக்கலாம் என்று
செய்தேன் முயற்சி
கொஞ்சம்  வளர்ச்சி
தொடங்கினேன் கிறுக்கினேன்
கோர்வையாய் செதுக்கினேன்

இது கவியா இலக்கண பிழையா?!

« Last Edit: March 07, 2018, 01:06:20 AM by KrisH »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: கவியா பிழையா !!
« Reply #1 on: March 07, 2018, 08:38:49 AM »
அடடே க்ரிஷ் தம்பி வணக்கம் ...

அருமை அருமை ...
தொடக்கமே அமர்க்களம் ...

''இல்லை என்றால் என்ன உருவாக்கலாம் என்று
செய்தேன் முயற்சி
கொஞ்சம்  வளர்ச்சி
தொடங்கினேன் கிறுக்கினேன்
கோர்வையாய் செதுக்கினேன்''

அனைவர்க்கும் தேவைப்டும்
ஊக்கமருந்து இது ...!!!
முயற்சியில் வளர்ச்சி தொடர்ந்தால்
வெற்றி வெகு தூரத்தில் அல்ல ...
முயற்சியில் செதுக்கிய கவிதை
மிக சிறப்பு ....
முயற்சி அது கவிதைக்கு மட்டுமின்றி
உங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை
அடையவும் தொடரட்டும் !!!

வாழ்த்துக்கள் க்ரிஷ் !!!
தொடரட்டும் முயற்சி ...
தொடரட்டும் கவிப்பயணம் !!!

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கவியா பிழையா !!
« Reply #2 on: March 07, 2018, 01:02:20 PM »
க்ரிஷ் நண்பா

வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்

எப்படி எழுதுவது மற்றவரை போல கவிதை என்று நேற்றிரவு கேட்டுவிட்டு
விடிந்ததும் அமர்க்களமாய் ஒரு பிள்ளையார் சுழி போட்டு துவங்கிவிட்டிர்

கவிதை அருமை உங்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கவிஞர்
எட்டி பார்க்க தொடங்கிவிட்டார்

தொடர்ந்து எழுதுங்கள் ,

வாழ்த்துக்களுடன் உங்கள்
****ஜோக்கர் ***



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline KrisH

Re: கவியா பிழையா !!
« Reply #3 on: March 07, 2018, 01:35:35 PM »
rithi sis
Idai padidu karuthu padindarkum pizhai alla kavithai endramaikum nandri

Offline KrisH

Re: கவியா பிழையா !!
« Reply #4 on: March 07, 2018, 01:35:45 PM »
ஜோக்கர் நண்பரே இதனை படித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி ;D இது நேற்று எழுதியது அல்லவே மாறாக நேற்றைய வினா இதனை இங்கு பதிய ஆவல் தந்தது
« Last Edit: March 07, 2018, 01:52:31 PM by KrisH »

Offline சாக்ரடீஸ்

Re: கவியா பிழையா !!
« Reply #5 on: March 07, 2018, 01:36:27 PM »
க்ரிஷ் தம்பி ...செம டா தம்பி ....வாழ்த்துக்கள் ..!

Offline KrisH

Re: கவியா பிழையா !!
« Reply #6 on: March 07, 2018, 01:40:43 PM »
சாக்கி சகோ நன்றி

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: கவியா பிழையா !!
« Reply #7 on: March 10, 2018, 12:26:53 PM »
தம்பி கவிதை சரி தான்
சரி பிழை என்பதை விடுத்தது
முயற்சிப்பது தான் தெளிவு

அருமையான முயற்சி
அழகான ஆரம்பம்
உன் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் உன் அக்கா
நீயா

Offline KrisH

Re: கவியா பிழையா !!
« Reply #8 on: March 10, 2018, 06:51:51 PM »
நீயா அக்கா படித்து கருத்து பதிவு‌ செய்ததற்கு நன்றி ;D ;D