Author Topic: சிந்தனை செய்  (Read 582 times)

Offline thamilan

சிந்தனை செய்
« on: December 23, 2017, 06:37:37 AM »
எல்லை யற்றது வான மில்லை
     என் சிந்தனை - மனித சிந்தனை
இறுதி யற்றது கால மில்லை
      என் வேதனை - இதய வேதனை

சாவை வென்றது தெய்வமில்லை
       தேன் புன்னகை - குழந்தையின் புன்னகை
தன்னை வென்றவன் துறவி யில்லை
      தொண்டனே - பொது தொண்டனே

கவிதை யாவது சொல்லி லில்லை
     அவள் கண்ணிலே - கடைக் கண்ணிலே
காவி யங்கள் மொழியி லில்லை
     அவள் இதழ்களிலே - எச்சில் இதழ்களிலே

அமிர்தம் தேவர்தம்   நாட்டி லில்லை
      கூழ்ப் பானையிலே - ஏழையின் பானையிலே
ஆலயம் உயர் கோவி லில்லை
      ஏழையின் குடிசையிலே - ஓலைக் குடிசையிலே

செயலி லில்லை நம் வெற்றி தோல்விகள்
      சிந்தையிலே - மனித சிந்தையிலே
சிகரமென்பது மலையி லில்லை
       உன் பணிவினிலே - நெஞ்சின் பணிவினிலே