Author Topic: தனிமைத்தவம்  (Read 665 times)

Offline SwarNa

தனிமைத்தவம்
« on: April 02, 2017, 05:16:26 PM »

என் மனதின் ஆசைகள் புரியாதோ
காத்திருப்பேன் என தெரியாதோ
நின் வதனம் காண தவித்திருப்பேன்
என அறியாயோ
இன்சொல்லில் எனை அமிழ்த்திட
வாராயோ


உனைக்காணாது ஏங்கிடும் என் மனம் சொல்லாதோ
உயிருடனிருந்தும்  நடைப்பிணமாய்
நான் வாழ்வதை
தாயின் அழைப்பொலி கேளாமல்
திகைத்து நிற்பவளின்
இதயம் திக்கற்று போனதை
தலைவனை நினைத்து
தலையணை நனைத்து
கரைபுரண்ட வெள்ளத்தால்
கறை கண்ட கன்னமும்
உள்ளமும் வெதும்பி கரைவதை
 
தந்தை அறிவாரா
சிந்தை சிறந்த செல்ல மகளின்
அன்பைக் கொண்டவனை

பெற்றவள் அறிவாளா
பற்றற்ற மகளின் மனதை
 பற்றிக்கொண்ட காதல் கொடியை

அண்ணன் தான் அறிவானா
உண்ணாநோன்பு நூற்கும் தங்கையின்
மனங்கொண்ட மணவாளனை

வாழ்ந்தால் உன் மனதில்
வீழ்ந்தால் நின் மடியில்
                    என
கொலுவீற்றிருக்கும்
இக்கோலமயிலின் கோலத்தை
கடுந்தவத்தை
கலைத்திட
        நீ
வருவாயோ
<3  <3  <3

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: தனிமைத்தவம்
« Reply #1 on: April 06, 2017, 10:08:13 AM »
Hi sis;) kavithai romba azhaga iruku:) urugi feel pani  eluthirukinga pola ;) kavipayanam thodara vazhthukkal:)

Offline ChuMMa

Re: தனிமைத்தவம்
« Reply #2 on: April 06, 2017, 11:33:52 AM »
heyy thangachiiii


Arumayana varigal konda kavithai.......kaadhal konda pennin mana nilai..

un manam kollai kolla varuvaan avan

vaazthukkal...


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SwarNa

Re: தனிமைத்தவம்
« Reply #3 on: April 06, 2017, 10:11:37 PM »
Vipu sis :) nandri

Offline SwarNa

Re: தனிமைத்தவம்
« Reply #4 on: April 06, 2017, 10:13:48 PM »
Chumma anna ungal vaazthu palikatum :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: தனிமைத்தவம்
« Reply #5 on: April 08, 2017, 06:26:22 PM »
வணக்கம் தங்கையே.....

முழுமையான..... 
தெளிவான.....
நிறைவான.....

சுமந்த கருவை
சிதைவின்றி நேர்த்தியாக
பிரசவித்த தாய்போல்.....


வாழ்த்தவும் பாராட்டவும்
வேண்டிய கட்டாயத்தை
தந்த கவிதை.....


வாழ்த்துக்கள்..... தங்கையே...

 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....