காற்றாகிறேன்
உன்னைத் தொடரும்
காற்றாகிறேன்
நீ சுவாசிக்க......
நீராகிறேன்
உன் பின்னால்
ஓடிவரும் நீராகிறேன்
நீ பருக.........
வானாகிறேன்
உன்னால் மடித்துவிட முடிகிற
வான் ஆகிறேன்
உனக்கு நிழல் தர.........
நிலமாகிறேன்
நீ நடந்து செல்லும்
நிலமாகிறேன்
உன்னைத் தாங்கிக் கொள்ள........
நெருப்பாகிறேன்
நீ தொட்டு ரசிக்கும்
நெருப்பாகிறேன்
உனக்கு ஒளி தர ......
உனக்காக
என்ன வேண்டுமானாலும் ஆகிறேன்
நீ எனக்கே ஆவதென்றால்.............